சென்னையை உருவாக்கிய தாமல் வன்னிய நாயக்கர்கள்:
மாத்தெரையன்(மாதிரையன் ) பட்டினம் மாதரசன் பட்டினம் என்று பல்லவன் திரையன் தொண்டைமான் பெயரால் அழைக்கப்பட்ட மயிலை கடற்கரை நகரம். பின்னர் பிரிட்டிஷ்,பிரெஞ்சு ,டச்சு வணிகர்களின் வாரத்தை உச்சரிப்பில் மதராஸ் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டது.
மாத்தெரயன் - மாதிரையன் பட்டினம்:
கிபி 7 ம் நூற்றாண்டு பல்லவன் - நரசிங்க போத்தரையன் 18 ம் ஆண்டு கல்வெட்டு மயிலாப்பூர் பகுதியை மாத்தெரயன் (மாதிரையன்) பட்டினம் பகுதியை சேர்ந்த சமண முனி மாணாக்கர் நற் கெளதமன் என்று குறிப்பிட்டு உள்ளது.
ஏழாம் நூற்றாண்டு காலத்தில் இருந்து மாதிரையன் பட்டினம் என்று அறியப்பட்ட மயிலாப்பூர் பகுதி.

மூன்றாம் நந்திவர்மன் கல்வெட்டு : தமிழ் -கிரந்தம் கலந்த கல்வெட்டு குறிப்பிடும் தகவல்.
நந்திபருமர் மாத்தரெயார் மஹாதேவியார் பாண்டியன் மகள் களவடிகள் கண்டன் மாறம் பாவையார் கொடுத்த தானம் பற்றிய சிதைந்த கல்வெட்டு.
பல்லவனுக்கு மாத்திரையன் என்ற பெயர் உண்டு என்பதை உறுதி செய்கிறது
மாதரசன் பட்டினம் :
கி பி 1396 ம் ஆண்டு கண்டர கூளி மாராயனின் பெண்ணேஸ்வரமடம் கல்வெட்டு கூறும் கடற்கரை பட்டினங்கள் : சதிரான(சதுரங்கப்பட்டினம்), புதுப்பட்டினம்,மாதரசன் பட்டினம்,சத்திக்குவரிய பட்டினம்,நீலகங்கரையன் பட்டினம்,கோவளம் என்ற தொண்டைமண்டல கடற்கரை பட்டினங்களை குறிப்பிட்டு உள்ளது.
ஏழாம் நூற்றாண்டு மாதிரையன் பட்டினம் 14 ம் நூற்றாண்டில் மதராசன் பட்டினம் என்று குறிப்பிடப்பட்டு உள்ள கல்வெட்டு.
ஏழாம் நூற்றாண்டு மாதிரையன் பட்டினம் 14 ம் நூற்றாண்டில் மதராசன் பட்டினம் என்று குறிப்பிடப்பட்டு உள்ள கல்வெட்டு.
விஜயநகர அரசர்களுக்குபின் நாயக்கர் என்ற பட்டம் வன்னியருக்கு வந்ததாக கூறும் அறிவாளிகளுக்கு அதற்க்கு முன்பே வன்னியர் நாயக்கர் என்று அழைக்கப்பட்ட சென்னை பகுதி கல்வெட்டுகள்.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மாங்காட்டு நாட்டு கோயம்பெட்டு செய்யசிவபூதன் மதிசூதனன் வானவநாயக்கன்.
திருப்பாலைவனம் கல்வெட்டில் மங்கை நாயக்கன் மழவராயன் :
மலைமண்டல நாயக்கர்கள் என்பவர்கள் வணிகக்குழுவுக்கு தலைமை ஏற்று நடத்தியவர்கள். இவர்களை மலைமண்டல மாதாக்கள் என்று அழைக்கப்பட்ட கல்வெட்டுகள் பர்மா,சீனா, தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் இலங்கையில் கிடைத்துள்ளன. இவற்றை எல்லாம் வணிகம் என்று மட்டுமே கூறி அதற்கு தலைமை வகித்த வன்னிய நாயக்கர் வரலாறை குறிப்பிடாமல் வணிக குழு பற்றி பலரும் எழுதிய வரலாறு தான் அதிகம்.
வணிகம் மற்றும் ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் வடதமிழகத்தில் வன்னிய பாளையகார்கள் - மண்டல அதிபர்கள் இவர்களிடம் மட்டுமே இருந்து உள்ளது. செஞ்சி -தஞ்சை -மதுரை என்று பிரிந்து ஆட்சி செய்தாலும் ஆட்சி அதிகாரம் பாளையக்காரர்களிடம் மட்டுமே இருந்து உள்ளது.
குலோத்துங்க சோழன் காலத்தில் முதல் மலைமண்டல மாதாக்கள் என்று அழைக்கப்பட்ட வணிகக்குழு தலைவன் அசாவு என்ற இசுலாமிய அரபு வணிகர். பின்னர் இவர்களிடம் இருந்து வணிகக்குழு தலைமை பதவி தொண்டைமண்டல ஆட்சியாளர்களான சம்புவராயர்கள் கையில் இருந்தது.
அதன் பின்னரும் தொடர்ந்த வன்னிய தாமல் நாயகர்கள் ஆட்சியே
வந்தவாசிகோட்டையும் -தொண்டைமண்டல கடற்கரை பகுதிகளில் வணிக தொடர்பு மற்றும் சுங்கவரி வசூல் செய்யும் குறிப்புகள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு குறிப்புகளில் உள்ளது.
மூன்றாம் ராஜாதிராஜ தேவர் ஆட்சி காலத்தில் அரசூர் உடையான் திருச்சிற்றம்பலம் உடையான் ஆன திருச்சிற்றம்பலப் பல்லவராயர் தொண்டைமண்டலத்து பல்லவராயர் மலைமண்டல மாதாக்கள் என்ற தலைமை பொறுப்பை பெற்றவர்.
மலைமண்டல மாதாக்கள் என்ற வணிகக்குழு தலைமை வகித்த தொண்டைமண்டல நாயக்கர்கள்:
மலைமண்டலத்து மாதாக்கள் ஆன அரசூர் உடையாரான திருச்சிற்றம்பலம் உடையாரும் என்பவரை பற்றிய இலங்கையில்உள்ள கல்வெட்டு வன்னிய நாயக்கர்கள் வணிககுழுவுக்கு தலைமை ஏற்று வணிகத்தை தங்கள் கையில் வைத்து இருந்ததையும் இதே வணிகம் சம்புவராயர் தனி ஆட்சி செய்யும் வரை அவர்கள் வசம் மட்டுமே இருந்தது. பின்னர் தாமல் வன்னியர்கள் கையில் இருந்து உள்ளது.
சதுரவாசகபட்டினம் என்ற சட்ரஸ் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ராஜநாராயண பட்டினம் என்று சம்புவராயர் பெயரால் அமைக்கப்பட்ட கோட்டையுடன் கூடிய பகுதி பின்னர் டச்சுக்காரர்களின் கையில் இருந்தது. சம்புவராயர்களை வெற்றி கொண்ட பின் கம்பண்ண உடையார் பெண் கொடுத்து மணஉறவு வைத்தும் இதே வணிக வருமானத்துக்கு மட்டுமே. வணிகத்தை ஒழுங்கு படுத்தி வருமானம் செய்யும் அனுபவம் இல்லாத ஒரே காரணத்தால் மட்டுமே விஜயநகர அரசு தொண்டைமண்டல கடற்கரை பட்டினங்களையும் வணிகத்தையும் வன்னிய நாயக்கர்கள் கையில் கொடுத்து இருந்து உள்ளனர்.
மாமல்லபுரம் அருகில் கடல் அரிப்பால் அழிந்த ஆலம்பரா கோட்டையின் மிச்சம் உள்ள பகுதிகள்
சம்புவராயர்களை போரில் வெற்றி பெற துணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள்:
கிபி 1369 ம் ஆண்டு கல்வெட்டு வீரபுக்கண்ண உடையார் குமாரர் வீரக்கம்பண்ண உடையார் பிரதானி ஸ்ரீமன் மஹாபிரதானி சோமப்ப தெண்ணாயக்கர் குமாரன் ஸ்ரீ மது கண்டர்கூளி மாராய நாயக்கர்
மதுரை உழுது பலதுறை விதைத்து வாணவதரையனையும் இவன் பரிகாரம் உள்ளது நிர்மூலஞ்செய்து அவன் ராஜ்ஜியமும் அத்தமும் மாவின் குதிரை சேனை இந்தமலையும் ராசாவான கம்பண்ண உடையாருக்கு கொடுத்தும் .
இவ்வருஷத்தில் திருபுவனமாதேவி வெளியில் (கூவம் ஆன தியாக சமுத்திர நல்லூர் )தொண்டைமானும் .. னையும் இங்கு திக் .. கடலோரத்தே நின்று இவனையும் முதுகுடனே ..
ராஜகம்பீர மலையை பிடித்த பின்னர் மட்டுமே சம்புவராயர் ஆளுமையில் இருந்த கடற்கரை பட்டணங்களை கம்பண்ண உடையாருக்கு கொடுத்ததாக உள்ள செய்தி. கடற்கரைப்பட்டிண கட்டுப்பாட்டை பெற கம்பண்ண உடையார் தன் தங்கையை சம்புவராயருக்கு மணம் முடித்து கொடுத்தற்கான முக்கிய காரணம்.
இராஜகம்பீரன் மலையை கொண்டுமும் மன்னன் உதார குணராமன் ஓட ..னைக் கை பிடி பிடித்து இவன் பணம், பண்டாரம் முத்துமாலை இரத்தினம் ஆனை குதிரை ...கிழக்கு கடலுக்கு
மேற்கு சதிரவானப்பட்டணம்,புதுப்பட்டணம், மாதரசன் பட்டணம், நீலகங்கரையன் பட்டணம்,கோவளம் மற்றும் உள்ள பட்டிணங்களையும் கரையும் துறையும் உட்பட கொண்டு ராஜாவின் கையில் கொடுத்து ராஜபதமான பதவியும் பெற்று தப்புவரையர் பிருநாத கண்டர் விருதும் கைக்கொண்டு,
வழுதாலம்பட்டு சாவடியை ஆட்சி செய்த தொண்டைமான் :
குரோதி வருடம் கிரிபுறமான அழிஞ்சிக்காட்டை கொண்டு வழுதாலம்பட்டு உசாவடியை சூறை கொண்டும் தொண்டைமானை பின் பிடித்து கொண்டும் கொள்ளிடமும் கூழைஆறு திருநீற்றுச்சோழ பட்டணமும்,ஜெயங்கொண்ட சோழபட்டணமும் ஜெயமும் கொண்டு தொண்டைமானை படதேறவிட்டு இவன் சகலமும் பணம் பண்டாரம் கைக்கொண்டு ராசாவுக்கு கொடுத்து .
விசுவாச வருடத்தில் வாலிகண்டமலை ஆணைகுந்தியும், கந்தூரிக்கோட்டையுங் கொண்டு இந்த மலையில் ராசாவான அரியண்ண உடையார் மைந்தனை பிடி பிடித்து இந்த மலையைச்சூழ்ந்த துங்கபத்திரை ஆற்றை துகைய மிதித்து இவன் பணம் பண்டாரம் ஆணை, குதிரை சேனையும் இராச்சியமும் ராசாவான புக்கண்ண உடையார் கையில் காட்டி குடுத்ததும் வேணும் தானங்களும் பெற்று தண்ண .. இராஜேந்திரசிங்க புறமலையை கைக்கொண்டும்.
பதினெட்டு கோட்டத்து வன்னியரை வென்றவர்கள் என்ற கல்வெட்டுக்கான தகவல்:
காஞ்சி மாநகர் சூழ்ந்த பதினெட்டுக் கோட்டமான தொண்டைமண்டலம் காத்து குடுத்தும் திருக்காரிகரை மலையைக் கொண்டும் இம்மலை அரணாயிருந்த வீரநாராயணபுரிஞ்சூழ்ந்த பாகநாடு,பட்டையநாடு .. காந்தப...நாடு இப்பற்றுகளை காத்துக் குடுத்தும் இப்பற்றில் இராசாவான சாவண்ண உடையார் உதயகிரிமலையை பற்றி இம்மலை அரண் அமையும்படி ஆதித்த ...சூத்திரம் என்னும் வீரப்பரிவாரத்தைஆண்டு கிரிந்த்ரம், வன்னிந்தரம், ஜனாந்தரமும் கொண்டு
இந்த கீர்த்திகளும் பெற்ற மூவராயர் கண்டர் ஸ்ரீ மது கண்டர கூளிமாராய நாயக்கர் நிகரிலி சோழமண்டலத்து விசையராஜேந்திர சோழ தகடூர் நாட்டு பெண்ணை தென்கரை பைய்யூர்ப்பற்று பெண்ணை மடத்தில் உடையார் பெண்ணை நாயனார் சன்னதி பெண்ணை ஆற்றில் கண்டகண்டர்வெளிப் பெருவாய்க்கால் சந்திராதித்தவரையும் செல்ல இரட்சிப்பார் பாதம் என் தலைமேல் ஸ்ரீஹரியரநாதன் பாஹ்மன்ஸ்து.
கி பி 1424 ம் ஆண்டு இரண்டாம் தேவராய மஹாராயர் ஆட்சியில்
தொண்டைமண்டல கடற்கரை பகுதிக்கு அரசன் ஆன பல்லவ காடவராயர் ஆன ஒற்றி அரசன்.
திருவொற்றியூர் அரசர் அரசுபெருமாள் ஆன காடவராயர்.
தொண்டைமண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்று தாமல் கோட்டம் - இந்த கோட்டத்தில் அமைந்து உள்ள வந்தவாசி , செய்யாறு,தூசி மாமண்டூர் பகுதிகளில் ஆட்சி செய்த தாமல் வன்னிய நாயக்கர்கள் பற்றிய கல்வெட்டுகள் நிறைய உள்ளன.
ஜெங்கொண்ட சோழ மண்டலத்து தாமல் கோட்டத்து தாமல் நாட்டு கல்வெட்டு :
தாமல் என்ற வன்னியர் கோட்டை :
வன்னியர் கோட்டையான தாமல் பகுதியில் கோவில் திருவிழாவாக இருந்தாலும் , பெரியவர்களின் நினைவு நாளாக இருந்தாலும் நடத்தப்படும் வன்னியபுராணம்.
மல்லிகார்ஜுன ராயர் ஆட்சி காலத்தில் கி பி 1469 ம் ஆண்டு வேலூர் மாவட்டம் அகரம் கிராமம் அகரம் பெருமாள் ஆளை காத்த அப்பன் கோவில் ஸ்ரீகார்யம் பார்க்கும் வன்னியதிம்ம நாயக்கர் பதிமூன்று பேரை விலைக்கு வாங்கியதாக உள்ள கல்வெட்டு குறிப்பு. இதே கல்வெட்டில் உள்ள தொண்டைமானார் -சேதிராயர் பற்றிய குறிப்பும் உள்ளது.
தாமல் காம நாயக்கர் செய்யாறு பகுதியை சேர்ந்த ஸ்ரீபுருசமங்கலம் ஏரியில் இருந்து வரும் மீன் விற்ற வருமானத்தை ஏரி பராமரிக்க செலவு செய்ய உத்தரவு கொடுத்த தகவல்.
தஞ்சை மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் கல்வெட்டு ராகவன் பிள்ளை அதிகாரி தாமல் அப்ப நாயன் செய்த திருமண்டபம்
கி பி 1538 ம் ஆண்டு ஆனந்ததாண்டவபெருமாள் ஆன தொண்டைமானார் வழுத்தாலம்பட்டு பகுதிக்கு அரசர் என்றும் மெய்கீர்த்தியாக மஹாமண்டலேஸ்வரர் -கண்ட நாராயணா - வழுதிமானம் காத்த பெருமாள் - துலுக்கர் மொஹரன் தவிர்த்தான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
செஞ்சி நாயக்கர்கள் - மதுரை நாயக்கர் - தஞ்சை நாயக்கர்கள் தனி ஆட்சி ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் காலம். விஜயநகர அரசர்கள் பெனுகொண்டாவில் இருந்து வலிமை இழந்து சந்திரகிரிக்கும் அங்கு இருந்து வேலூர் பகுதிக்கும் இடம் பெயர ஆரம்பித்த பின்னர் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் தனி ஆட்சி செய்ய தலைப்பட்டனர். அதனால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட பதவி போட்டியை வைத்து ஆதரவாளர்கள் இரு பக்கம் மாறி மாறி சென்றதும் ஆட்சி வலுவிழக்க காரணம் ஆனது.
இரண்டாம் வெங்கடபதி ராயர் (1586 - 1614) ஆட்சி காலத்தில் தலைநகர் 1592 ல் சந்திரகிரிக்கும் 1604 ம் ஆண்டு வேலூர் கோட்டைக்கும் மாற்றப்பட்டது.குழந்தை இல்லாத காரணத்தால் தனது அண்ணன் மகன் இரண்டாம் ஸ்ரீரங்க ராயரை அரசனாக வெங்கடபதி ராயர் அறிவித்தார்.
வெங்கடபதி ராயரின் மனைவியான ஓப்பாயம்மா கொப்புரி
ஜாக்கராயனின் சகோதரி. ஓப்பாயம்மா ஒரு பிராமண குழந்தையை தனது குழந்தை என்று கூறி அதற்க்கு அரச உரிமை கேட்டு பிரச்சனை செய்ய கொப்புரி ஜக்கராயன் இரண்டாம் ஸ்ரீரங்க ராயரை குடும்பத்துடன் சிறையில் அடைத்தார் .
இரண்டாம் ஸ்ரீரங்க ராயரை குடும்பத்துடன் சிறையில் அடைத்ததை எதிர்த்து வெங்கடகிரி எச்சம நாயக்கர் வேலூர் கோட்டையில் இருந்து ஸ்ரீரங்கராயரின் 12 வயது குழந்தையை அரண்மனை வண்ணான் மூலம்வெளியே கடத்தி வந்தனர். ஸ்ரீரங்கராயர் குடும்பத்தோடு கொலை செய்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.
ஸ்ரீரங்கராயர் இறந்த பின்னர் எச்சமா நாயக்கர் சந்திரகிரி அரண்மனையை தாக்க அங்கு இருந்தவர்களான வெங்கடபதி ராயரின் உறவினர்கள் தப்பித்து ஓடியனர். பின்னர் வேலூர் கோட்டைக்கு கொப்புரி ஜக்கராயனை எதிர்த்து போருக்கு செல்ல அரசன் இல்லாத குழப்பம் மற்றும் கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் எல்லாம் எச்சம நாயக்கருக்கு ஆதரவாக திரும்பியதால்
கொப்புரி ஜக்கராயன் செஞ்சி மற்றும் மதுரை நாயக்கரிடம் ஆதரவு கேட்டு தஞ்சம் அடைந்தார் . கொப்புரி ஜக்கராயனின் ஆட்சி பகுதிகளை(தற்போதைய கரவெட்டி நகர் பகுதி) எச்சம நாயக்கர் கைபற்றி வெங்கடகிரி அரசுடன் சேர்த்து கொண்டார்.
ஸ்ரீரங்கராயனின் 12 வயது மகனான ராம தேவராயன் - எச்சம நாயக்கர் தஞ்சை நாயக்கர் உதவியுடன் கொப்புரி ஜாக்கராயனுடன் போர் செய்தனர்.
செஞ்சி-மதுரை நாயக்கர்கள் தனி ஆட்சி செய்ய விரும்பியதால் கொப்புரி ஜக்கராயனுக்கு ஆதரவு கொடுத்தனர். இருவருக்கும் கொள்ளிடம் அருகில் நடைபெற்ற போரில் எச்சம நாயக்கரால் கொப்புரி ஜக்கராயன் கொல்லப்பட அவர் தம்பி கொப்புரி எதிராஜா தப்பி ஓடிவிட்டார்.
செஞ்சி நாயக்கர் கோட்டையை தவிர அனைத்தும் இழக்க மதுரை நாயக்கரை கைது செய்தனர்.
ராம தேவராயர் தனது 15 ம் வயதில் பட்டம் சூட்டப்பட்டு அரசரானார். கொப்புரி ஜக்கராயன் தம்பியான கொப்புரி எதிராஜன் மகளை திருமணம் செய்த காரணத்தால் வெங்கடகிரி அரசனும் படைத்தலைவனாக இருந்த எச்சம நாயக்கர் விலகினார். எதிராஜன் கொப்புரி அரசை திரும்ப பெற்றார்.
கொப்புரி எதிராஜன் திரும்ப பெற்ற கரவெட்டி நகர் ஜமீன் பகுதி திருத்தணி வரை உள்ள பகுதி மட்டுமே. காளஹஸ்திக்கும் இந்த பகுதிக்கு தொடர்பே இல்லாத போது காளஹஸ்தியில் இருந்து 150 கிமீ மேல் உள்ள வந்தவாசி பகுதிக்கு அரசராக குறிப்பு எழுதும் எல்லா அறிவாளிகளும் எந்த வரலாறை மறைக்க எழுதுகின்றனர்.
ராமதேவராயரின் 8 ம் ஆட்சி ஆண்டு காலத்து கல்வெட்டு . தார கோத்திரத்து தாமல் வெங்கட்டப்ப நாயக்கரின் பேரன் - சென்னப்ப நாயக்கரின் மகன் ஆன வெங்கட்டப்ப நாயக்கர் திருக்கழுக்குன்றம் ஷேத்திர ஈஸ்வருக்கு செய்த தானம்.
இடங்கை - வலங்கை புராணம் கூறும் வன்னியர்களின் கோத்திரம் மற்றும் பிரிவுகள் :
நீலகங்கன் வரத்தில் வந்தவர்கள் - பாலாற்றுக்கு வடக்கில் இருப்பவர்கள் கிருஷ்ண வன்னியர் - அவர்களின் கோத்திரங்கள் பத்ம கோத்திரம் , ஜம்பு கோத்திரம், பிருகு கோத்திரம் , சத்ய கோத்திரம் , நித்ய கோத்திரம்.
வஜ்ரபாகன் வம்சத்தில் வந்தவர்கள் - பாலாறு முதல் தென்பெண்ணை பகுதியில் இருப்பவர்கள் ஜம்பு வன்னியர் - அவர்களின் கோத்திரங்கள் ஜம்பு வன்னியர் கோத்திரம் , முனிவர் கோத்திரம் , நிர்மல கோத்திரம்.
கங்கபரிபாலன் வம்சத்தில் தென்பெண்ணை முதல் காவேரி வரை இருப்பவர்கள் ப்ரம்ஹ வன்னியர் - அவர்களின் கோத்திரம் பரம கோத்திரம் , வசு கோத்திரம் , வன்னிய கோத்திரம் , தனஞ்ஜய கோத்திரம் , கிருஷ்ண கோத்திரம்
ஜம்புகுல வேந்தன் வன்னியப்பள்ளி - காவேரி முதல் சேது பகுதி வரை இருப்பவர்கள் கங்க வன்னியர் அவர்களின் கோத்திரம் கந்தர்வ கோத்திரம் , கமண்டல கோத்திரம் , கெளமாரி கோத்திரம் , தன கோத்திரம், கந்த கோத்திரம்
பரசுராமன் சந்ததி - அரசுப்பள்ளி சிதம்பரத்துக்கு பூர்வபாகம் சமுத்திரம் வரை இருப்பவர்கள் இந்திர வன்னியர் . இவர்கள் கோத்திரம் இந்திர கோத்திரம், வீர கோத்திரம் , விஜய கோத்திரம் தாரா கோத்திரம், ததி கோத்திரம்.
ராமதேவ ராயர் அலியா ராமராயனின் பேரன் மூன்றாம் வெங்கடபதியை தனக்கு பின்னர் அரசராக தேர்ந்து எடுத்தார்.
மூன்றாம் வெங்கடபதியின் மச்சினர்கள் என்று தாமல் வெங்கட்டப்ப நாயக்கரும் - அக்க நிருபேந்திரா இருவரையும் குறிப்பிட்டு உள்ள பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு குறிப்புகள். கர்நாடக அரசர்கள் வரலாற்றிலும் தாமல் வெங்கட்டப்ப நாயக்கரை வெங்கடபதி ராயரின் தளபதி என்றும் "LORD GENERAL OF CARNATAK" என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளதே முழு அரசையும் ஆட்சி செய்தவர் தாமல் வெங்கட்டப்ப நாயக்கர் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
தாமல் வெங்கடப்ப நாயக்கர் கல்வெட்டு 1625 முதல் 1654 வரை உள்ளது.
செய்யாறு நரசாமங்கலத்து கல்வெட்டு :
A.R 262 of 1906 :
கி பி 1638 கல்வெட்டு சென்னப்ப நாயக்கர் மகன் வெங்கடப்ப நாயக்கர் தூசி மாமண்டுர் பகுதியில் ஏற்படுத்திய சென்னசாகரம் என்ற ஏரி. அந்த ஏரிக்கு நீர் பாலாற்றில் இருந்து கால்வாய் வெட்டி கொண்டுவந்த தகவல்.
கி பி 1654 ம் ஆண்டு கல்வெட்டு வெங்கடபூபாலன்( வெங்கடப்ப நாயக்கர்) ஏரியையும் பாதுகாக்க ஏரி நீரில் விவசாயம் செய்பவர்களிடம் இருந்து வரி வசூல் மூலம் செய்த தகவல்.
A.R 264 of 1906 : சமஸ்கிரத கல்வட்டு :
கி பி 1638 ம் ஆண்டு கல்வெட்டு சென்னசாகரம் ஏற்படுத்திய தாமல் வெங்கடப்ப நாயக்கர் பற்றிய முழு குறிப்பும் இந்த கல்வெட்டில் உள்ளது.
குல முதல்வராக அப்ப நாயக்கர் (அப்ப மஹிபதி) அடுத்தவராக வெங்கலப்ப நாயக்கர் , தாத்தா வெங்கட்டப்ப நாயக்கர் தந்தை சென்ன மஹிந்திரா என்ற சென்னப்ப நாயக்கர் தாயார் கிருஷ்ணமாம்பா என்று மொத்த குடும்பத்தை பற்றிய குறிப்பாக உள்ளது.
வெங்கட்டப்ப நாயக்கர் வீரம்,அழகு கல்வி,தானத்தில் சிறந்தவர் என்றும் சிறந்த வெற்றியை பெற்ற வீரன் செஞ்சி நாயக்கரை போரில் வென்றவர் தனது புகழை எங்கும் பரப்பியவர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முவண்டூரில் அக்கரகாரம் அமைத்தார். சென்னசாகரம் என்ற ஏரியை அமைத்து அதற்கான நீரை பாலாற்றில் இருந்து கொண்டு வந்து ஏரியின் நீரால் 32 கிராமங்களுக்கு தேவையான விவசாயத்துக்கு கொடுத்தார்.
வெங்கடப்ப நாயக்கரின் வலது கரம் அவரது தம்பி அக்க நிருபா என்றும் நவபோஜா என்றும் குறிப்பிட்டப்பட்டு உள்ளது.
சென்ன சாகரம் -தூசி மாமண்டூர்
22 /05/2019 ல் கண்டுபிடிக்க பட்ட கல்வெட்டு :
வந்தவாசி கீழ்வில்லிவலம் கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சிதலமடைந்த சிவன் கோவிலை கிராம மக்கள் சுத்தம் செய்யும் போது கிடைத்த கல்வெட்டு 22 /05/2019 ல் தினமணி நாளிதழில் பிரசுரம் ஆகி உள்ளது.
தாமல் வெங்கட்டப்ப நாயக்கர் ஏரி மீன் விற்பனையில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு ஏரிக்கரையில் பனைமரம் வைத்து கரையை பாதுகாக்க கூறிஇருப்பதாக குறிப்பு உள்ளது.
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு குறிப்புகளிலும் கர்நாடக அரசர்கள் வரலாற்றிலும் தாமல் வெங்கட்டப்ப நாயக்கரை வெங்கடபதி ராயரின் தளபதி என்றும் "LORD GENERAL OF CARNATAK" என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வெங்கடபதி ராயரின் மொத்த பகுதிக்கும் தளபதி வந்தவாசி கோட்டையில் இருந்து ஆட்சி செய்ததும் அவர் சகோதரரும் மகன்களும் பூந்தமல்லி பகுதியில் இருந்து ஆட்சி செய்து கடற்கரை பகுதிகளையும் வணிகத்தையும் முறைப்படுத்தி உள்ளனர்.
வந்தவாசி கோட்டையின் தற்போதைய நிலைமை :
காளஹஸ்தி குடும்ப வரலாறு :
சென்னையின் வரலாறை காளஹஸ்தி ஜமீன் வரலாறாக தாரைவார்க்கும் வரலாறு -புவியியல் ஆய்வாளர்களுக்கும் - மற்றும் வன்னிய சாதி வரலாறை மறைக்கும் நல்லவர்களுக்கு காளஹஸ்தி குடும்ப வரலாறை கூறும் கல்வெட்டு ஆதாரம்.
தமரா என்ற பெயரை கொண்ட குடும்பம் - வெங்கடகிரி ஜமீனுக்கு உட்பட்டு ஆட்சி செய்தவர்கள் மட்டுமே.
காளஹஸ்தி பகுதிக்கு வரும் முன்னர் ஆட்சி செய்த பகுதி - கனிகிரி- என்ற பகுதியில் வெங்கடகிரி ஜமீன் மூலம் ஆட்சி பெற்றதாக கூறும் கல்வெட்டு.
கட்டாகிண்டிபள்ளி கல்வெட்டு தமரா குடும்பத்தின் வம்சாவளி வரலாறையும் சேர்த்துக் கூறும் கல்வெட்டு :
கி பி 1579 ஸ்ரீரெங்கராயதேவ மஹாராயர் பேணுகோண்டாவில் இருந்து ஆட்சி செய்யும் காலத்தில் இனியால கோத்திரத்தை சேர்ந்த தமரா தர்மா நாயினம காருவின் பேரனும் - வரதா நாயினம காருவின் மகனும் ஆன சென்னப்ப நாயினம காரு பொலிசேர்ல சென்னராய பெருமாளுக்கு செய்த தானம்.
வெங்கடகிரி அரசர் வெலுகோட்டி ரெங்கப்ப நாயினமகாரு எங்களுக்கு கொடுத்த ஆட்சி பகுதியான கனிகிரி-பொலிசேர்ல சீமையின் பகுதியில் இருந்து கொடுத்த தானம்.
காளஹஸ்தி குடும்பம் -வெங்கடகிரி அரசருக்கு கீழ் ஆட்சி செய்தவர்கள் மட்டுமே. அவர்களுக்கு வெங்கடகிரி அரசருக்கே இல்லாத அதிகாரம் -ஆட்சி பகுதியை எல்லாம் சேர்த்து கதை எழுதியவர்கள் சொன்ன கதை தான் காளஹஸ்தி குடும்பத்துக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பு.

தாமல் - தமரா குடும்பங்களின் வரலாற்று வேறுபாடு கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகள் மூலம் :
தாமல் - வேங்கடப்ப நாயக்கர் மகன் சென்னப்ப நாயக்கர் - பேரன் -வேங்கடப்ப நாயக்கர் - பிரிடிஷ்காரர்களுக்கு சென்னையை கொடுத்தவர்.
கோத்திரம் - தார கோத்திரம்
தமரா - தர்மாநாயினம காரு மகன் வரதா நாயினம காரு - பேரன் சென்னப்ப நாயினம காரு.
கோத்திரம் - இனியாள கோத்திரம் .
வெங்கடகிரி அரசருக்கு உட்பட்டு மட்டுமே ஆட்சி செய்தவர்கள் காளஹஸ்தி தமரா குடும்பத்தினர் பற்றிய தகவல் 25 ம் தலைமுறை ஆட்சியாளரான வெங்கடகிரி ராஜா ஸ்ரீ பங்காரு யட்சம நாயுடு பஹதூர் திருமணம் செய்தது பாப்பம்மா என்ற தமரா குடும்பத்தில் என்றும் அவரது அரச சபையில் அனைவரும் நின்றபடி இருக்கவேண்டும் என்றும் தனது மச்சினர் தமரா வெங்கடபதி நாயுடு மட்டும் தென்கிழக்கு பகுதியில் அமர இடம் அளிக்கப்பட்டு உள்ளதாக உள்ள குறிப்பு. ஆரம்பம் முதல் பிரிட்டிஷ்காரர்கள் நேரடி ஆட்சிஆரம்பித்த 1800 வரை வெங்கடகிரி குடுமபத்தின் கீழ் மட்டுமே ஆட்சி செய்தவர்கள் தமரா என்ற குடும்ப பெயரை கொண்ட காளஹஸ்தி ஜமீன் ஆட்சியாளர்கள்.
அவர்களுக்கு உரிய வரலாற்று குறிப்புக்களில் தமரா என்றும் சென்னையை பற்றி குறிப்பிடும் போது மட்டுமே தாமர்லா என்று கதை எழுதி இல்லாத வரலாறை ஒரு சிறிய பகுதியை ஆட்சி செய்தவருக்கு கொடுக்க ஆதாரமாக பிரிட்டிஷ் ஆவணங்களை 1800 பின்னர் தொகுத்த அரைகுறை ஆவணங்களை வைத்து சென்னையை உரிமை கொண்டாட இவர்களை கொண்டுவந்து இணைக்கும் - இணைத்த கேடுகெட்டவர்கள் இனியாவது தெலுங்கர் வரலாறு என்று கூவுவதை நிறுத்த வேண்டும். வன்னியர் வரலாறாக இருக்க கூடாது என்று கதறும் தெற்கத்தி கூட்டத்துக்கு சொல்வதும் ஒன்றே ஒன்று தான். ஓட்டு மொத்த சென்னையும் வன்னியர் சொத்துக்களை அதிகமாக கொண்ட வன்னியர் மண் மட்டுமே.
காளஹத்தி ஜமீன் பகுதியின் எல்லையாக கொடுக்கப்பட்ட குறிப்புகள் :
1577ம் வருடம் தாது வருடம் எழுதப்பட்ட குறிப்புகளாக பிரிட்டிஷ் காரருக்கு காளஹஸ்தி ஜமீன் மானேஜர் கொடுத்த தகவலாக குறிக்கப்பட்டு உள்ள எல்லை குறிப்புகள்.
ஸ்ரீ ரங்கராய சந்திரகிரியில் இருந்து ஆட்சி செய்யும் காலத்தில் எல்லை பகுதியாக குறிக்கப்பட்ட பகுதிகள் .
வடக்குப்பகுதியாக துர்கராஜு பட்டினம் என்ற ஆறுமுகம் பகுதியை சேர்ந்த திருமூர் , தெற்குப்பகுதியாக சூலூர் பேட்டைக்கு அருகில் உள்ள வெங்கால புரம் பகுதியும் குறிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு எல்லை குறிப்பை அடையாளம் காண முடியவில்லை என்ற குறிப்பு பிரிட்டிஷ்காரர்கள் குறிப்பில் உள்ளது.
காளஹஸ்தி எல்லை பகுதியின் வரைபடம்:
கி பி 1625 ம் ஆண்டு தென் பகுதியில் மசூலிப்பட்டினத்திற்கு அடுத்த முதல் பிரிட்டிஷ் வணிக மையம் ஆன ஆறுமுகம் என்ற துறைமுகப்பட்டினம்.
இந்த துறைமுகம் பகுதி வெங்கடகிரி அரசரால் ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது.
http://www.isarasolutions.com/books/113/book.pdf
The English East India Company and Trade in Coromandel, 1640-1740
என்ற ஆவணத்தில் இருந்த குறிப்புகள் :
மசூலிப்பட்டினத்தில்முதன் முதலில் கி பி 1611 ல் ஆரம்பித்த வணிகத்துக்கு தடையாக அந்த பகுதியின் ஆட்சியாளர்களும், அங்கே வாங்கப்படும் பொருட்களின் தரமும் சரியாக இல்லாத காரணமும், அந்த காலகட்டத்தில் உருவான பெரிய பஞ்சமும், டச்சுக்காரர்களின் முறையற்ற வணிகமும் அந்த பகுதியில் இருந்து வெளியேறமுடிவு செய்தனர். அதனால் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு பகுதியில் நிரந்தரமாக ஒரு வணிகமையம் அமைக்க இடம் தேட ஆரம்பித்தனர்.
கி பி 1626 ம் ஆண்டு ஆறுமுகம் என்ற வெங்கடகிரி அரசுக்கு சொந்தமான பகுதியில் தங்கள் வணிக மையத்தை ஆரம்பித்தனர்.
கிருஷ்ணபட்டினம் துறைமுகத்துக்கு தெற்கு பகுதியில் அமைந்த ஆறுமுகம் என்ற துறைமுகம் பெரிய கப்பல்களை ஆற்று முகத்துவாரத்தில் நிறுத்த வசதியான பகுதி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பக்கத்து கிராமங்களில் நடைபெறும் தறி தொழிலால் துணி ஏற்றுமதிக்கு சிறந்தஇடம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பழவேற்காடு பகுதியில் அமைந்த டச்சு வணிக குழுவினால் ஏற்படும் பிரச்சனைகளால் ஆறுமுகம் பகுதி வணிகத்திற்கு உதவியாக இல்லை என்று மாற்று இடம் தேடும் முயற்சியில் இருந்தனர்.
பழவேற்காடு பகுதியில் டச்சுக்காரர்கள் அமைத்த கோட்டை -வணிக தளத்தின் வரைபடம்.
மாற்று இடம் தேடும் நேரத்தில் பழவேற்காடு முதல் சாந்தோம் வரை உள்ள கடற்கரை பகுதிகளின் வலிமைமிக்க ஆட்சியாளர் ஆன தாமல்(தாமர்ல) வெங்கட்டப்ப நாயக்கர் மதரசன் பட்டினம் பகுதியில் வணிகமையம் அமைக்க அழைப்பு விடுத்தார். அதை ஏற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற நிரந்தர வணிக மையத்தை ஆரம்பித்தனர். ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி இதுவரை சந்தித்த உள்ளூர் ஆட்சியாளர்களின் தொல்லை, கடிமையான பஞ்சம், டச்சுக்காரர்களின் போட்டி நடவடிக்கைகளில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை உதவியாக இருந்தது.
ஏற்றுமதி - இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்தும் பொருட்கள் வெளியே செல்லும் போது அந்த பகுதி நாயகர்களுக்கு சுங்கவரி செலுத்தும் படி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆறுமுகம் பகுதியும் அதன்ஆட்சியாளர்களும் கி பி 1640 ம் ஆண்டு கோல்கொண்டா முஸ்லீம்களின் ஆட்சியின் கீழ் சென்றதையும் அங்கு இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாறியதையும் சரியான இடத்தை தேர்ந்து எடுத்ததாக கிழக்கு இந்திய கம்பெனி ஆவணம் குறிப்பிடுகிறது.
பிரான்சிஸ்டே அல்லது கம்பெனியின் ஏஜென்ட்கள் யார் பதவியில் இருந்தாலும் கோட்டை அமைத்த பின்னர் மதரசாப்பட்டினம் பகுதியை இரண்டு வருடங்கள் ஆட்சி செய்யலாம் என்றும் அதன் பின்னர் வரும் சுங்கம் மற்றும் ஏற்றுமதி வருமானத்தில் சரிபாதியாக கொடுக்கவும், அதன் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சுங்கவரி குறிப்பிடப்பட்ட இரண்டு வருடங்களுக்கு பின்னர் நீக்கப்படும் என்றும். தங்கள் ஆட்சி பகுதி வழியாக அல்லது மற்ற நாயக்கர்களின் ஆட்சி பகுதி வழியாக நடைப்பெறும் வணிக பொருள்கள் இடமாற்றம் போன்றவற்றிக்கு மற்ற வணிகர்கள் செலுத்தும் தொகையில் பாதி அளவு செலுத்தும்படி கூறப்பட்டு உள்ளது.தங்களுக்கு தேவையான நாணயங்களை அவர்களே தயாரித்து கொள்ளவும் அதற்கும் வரி விலக்கு வழங்கப்பட்டு உள்ளது.
கிழக்கிந்திய கம்பெனி வியாபாரிகள்,
பெயிண்ட்கள், நெசவாளர்கள் இவர்களுக்கு பணம் கொடுக்கும் முன்னர் தங்களுக்கு தகவல் கொடுக்கவேண்டும் என்றும் தங்கள் பகுதியில் வசிக்கும் அவர்களுக்காக நேர்மையான வணிகத்திற்கு தேவையான உறுதியை அளிப்பதாகவும்,
கம்பெனியுடன் வணிகம் செய்பவர்களின் பணம் அவர்களின் கணக்கில் வைத்து கொள்ள வேண்டும் என்றும் அவ்ர்கள் எங்கள் ஆட்சி பகுதியில் இருந்தால் அவர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சென்னப்ப நாயக்கர் பட்டினம் கோட்டையின் அமைப்பு கப்பல்களோடு டச்சு ஆவணத்தின் புகைப்படம்.
விஜயநகர பேரரசின் கடைசி மன்னர் என்று எழுதப்பட்ட குறிப்பில் உள்ள தகவல் :
விஜயநகர கடைசி ஆட்சி காலத்தில் அரசு முழுவதும் தாமல் சகோதரர்கள் ஆன வெங்கடப்ப நாயக்கர் ,அக்கப்ப நாயக்கர் கையில் இருந்தது என்றும் இருவரும் அரசரான வெங்கடபதி ராயரின் மைத்துனர்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வந்தவாசியின் ஆட்சியாளராக இருந்த தாமல் வெங்கட்டப்ப நாயக்கரின் கையின் முழு அதிகாரமும் இருந்தது என்றும் முக்கிய அமைச்சர் என்றும் கடற்கரையில் இருக்கும் ஐரோப்பிய கம்பெனிகள் அவரை LORD GENERAL OF CARNATAK - கர்நாடக அரசரின் தளபதி என்று குறிப்பிடுவதாக கூறப்பட்டு உள்ளது. வந்தவாசி பகுதியின் வருமானம் என்று 6000-9000 பகோடா என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஸ்ரீ ரங்கநாயக்கர் திருப்பதி பகுதியின் கவர்னர் என்றும் வடக்கு பகுதியின் ஆட்சியாளர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளார்.மற்ற பகுதியின் ஆட்சியாளர்களிடம் ரங்கராயருக்கு போதிய ஆதரவு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வெங்கடபதிராயர் இறந்த பின்னர் ரங்கராயர் ஆட்சி பொறுப்பு ஏற்பதை தாமல் வெங்கடப்ப நாயக்கர் எதிர்த்தார் என்றும் அவரை LORD CHANCELLOR OF THE CARNATAK என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கிழக்கு இந்திய கம்பனியின் குறிப்புகளில் கோல்கொண்டா படையினர் மொத்த நாட்டையும் பிடித்ததும், ஆறுமுகம் பகுதியை ரங்கராயர் கைப்பற்றியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வெங்கடபதிராயர் இறந்த பின்னர் கி பி 1642 ல் ஸ்ரீ ரங்கராயர் பதவி ஏற்றார்.
கிழக்கிந்திய கம்பெனி ஸ்ரீ ரங்கராயரிடம் செய்து கொண்ட புதிய ஒப்பந்தம் கி பி 1645 நவம்பர்:
ஸ்ரீ ரங்கராயர் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை கேப்டன் ஆன தாமஸ் இவிய் மூலம் செய்து கொடுத்த உரிமை பத்திரம்.
வெங்கடப்ப நாயக்கர் செய்து கொடுத்த ஒப்பந்ததின் படி உள்ள எல்லாமும் இந்த புதிய ஒப்பந்தத்தில் உள்ளது.அதோடு பட்டணத்திற்கு தன் பெயரான ஸ்ரீ ரங்கராய பட்டினம் என்று வைக்க வேண்டும் என்றும் புதிதாக நரிமேடு பகுதியும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. புதிதாக அரசு நிர்வாகம் மற்றும் நீதிமன்ற நிர்வாகமும் கொடுக்கப்பட்டது. பூந்தமல்லி மற்றும் சுற்று பகுதி நாயக்கர்கள் தொல்லை கொடுத்தால் ராயர் உதவி செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தாமல் வெங்கடப்ப நாயக்கரின் மகன்கள் அய்யப்ப நாயக்கர் , திம்மப்ப நாயக்கர் என்று குறிப்பிடப்பட்ட திம்மப்ப நாயக்கரின் மகள் எழுதிய கடிதம்.
திம்மப்பநாயக்கரின் மகள் பச்சை பாப்பம்மாள் தன்னை சென்னப்ப நாயக்கரின் கிரேட் கிராண்ட் டாட்டர் ( கொள்ளு பேத்தி) என்று குறிப்பிட்டு எழுதியகடிதம்
(FAC REC FORT ST GEORGE VOL XXVI 8 TH MARCH 1671/2)
என் தாத்தாவின் அப்பாவின் பெயரால் அமைக்கப்பட்ட சென்னப்பட்டினம் நகரத்தில் வசிக்கும் எங்கள் உறவினர்களுக்கு கம்பெனி செய்து கொடுத்த உதவியும் அவர்கள் கம்பெனிக்கு செய்த உதவியும் சென்னப்பநாயக்கரின் பெயரையும் நினைவையும் அனைத்து நாடுகளுக்கும் உங்கள் நாடுமூலம் கொண்டு செல்ல உதவும். இதன் மூலம் உலகில் உள்ள நாடுகளுக்கு எங்கள் தாத்தாவின் தந்தை பெயர் அவரது சாம்பல் உலகில் பரவியது போல் நிலைத்து நிற்கும். என்னால் முடிந்தவரை இந்த நகரத்தின் வியாபாரம் செழிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று சர் வில்லியம் லாங்ஹோர்ன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியதாக குறிப்பு.
அய்யப்ப நாயக்கரின் மகன் : வெங்கடாஜலபதி நாயக்கர்.
கி பி 1703 ம் ஆண்டு டிசம்பர் 13 ம் தேதி சென்னப்பட்டினம் என்று முதலில் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாடகை ஒப்பந்தம் செய்த வெங்கடப்ப நாயக்கரின் பேரன் கவர்னரை சந்திக்க வருவதாக செய்தி அனுப்பி இருந்தார்.
முன்னாள் கவர்னர் காலத்தில் இருந்து வேலையில் இருக்கும் கம்பெனியின் பழைய வேலைக்காரர்கள் கொடுத்த தகவல் இவரது தந்தை கவர்னரை சந்திக்க வரும் போது அவருக்கு மிகுந்த மரியாதையும் அன்பளிப்புகளும் கொடுத்ததாக கூறி தகவலை ஏற்று வெங்கடாஜலபதி நாயக்கருக்கும் தகுந்த மரியாதை செய்ய முடிவு எடுத்தனர்.
5 யார்டு சிவப்பு கம்பள வரவேற்புடன் இரண்டு கத்தியும் 110 பக்ஸ் தங்க சங்கிலியும், ஒரு சிறிய பைனாகுலர் கொடுத்து சிறப்பித்ததாக குறிப்புகள் உள்ளது.
P.C VOL XXXII .. 13th DEC 1703
அய்யப்ப நாயக்கரின் பேரன் : வெங்கடபதி நாயக்கர்
திருவெற்றியூரில் வசிக்கும் வெங்கடபதி நாயக்கர் சென்னப்பட்டினத்தை அளித்த வெங்கட்டப்ப நாயக்கரின் பேரன் என்றும் அவர் கவர்னரை சந்திக்க விரும்புவதாக செய்தி அனுப்பு உள்ளார். அவர் தந்தை கவர்னர் பிட் அவர்களை சந்திக்க வந்தபோது தங்க சங்கிலியும் மற்ற பரிசுகளும் கொடுக்கப்பதை குறிப்பிட்டு இருந்தார்.
இவருக்கும் அதே மாதிரியான வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.40 பகோடா மதிப்புடைய தங்கச்சங்கிலியும் மற்ற பரிசுகளும் கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
எல்லா பரிசுகளும் கொடுத்து கெளரவப்படுத்தி 15 துப்பாக்கி முழங்க மரியாதை செலுத்தினர்.
P.C VOL 1IV 3rd MARCH 1723/4
சென்னையின் முதல் பாளையக்காரர் :
பெத்த நாயக்கரின் உரிமையை மீண்டும் அவருக்கு கொடுக்கும்படி எடுக்கப்பட்ட போலீஸ் கமிட்டி முடிவும் அவரது மகனான கொடுங்கையூர் அங்கப்ப நாயக்கரை பாளையக்காரர் ஆக நியமித்த தகவல்.
சென்னையின் முக்கிய பகுதியான அங்கப்ப நாயக்கர் பெயரால் உள்ள தெரு சென்னையின் பாளையக்காரர் பெயரால் அமைந்து உள்ளது.
சென்னையின் முழுபாதுகாப்பும் போலீஸ் துறை - துறைமுக சுங்க வசூல் செய்வது, வீடுகளுக்கு வரிவசூல் செய்வது போன்ற அதிகாரம் மிக்க பதவியில் கொடுங்கையூர் வன்னிய நாயக்கர்கள் கையில் மட்டுமே இருந்து உள்ளது. திருவொற்றியூர் காடவராய அரசர்களின் வாரிசான பெத்த நாயக்கரும் அவர் மகன் அங்கப்ப நாயக்கரும் சென்னை பகுதியின் முதல் பாளையக்காரர்கள். சென்னைக்கு சம்பந்தமே இல்லாத வரலாற்றை திணிக்கும் இந்த வரலாற்று திருடர்கள் செய்த ஒரே நன்மை உண்மையான வரலாறு தேடி எடுக்க உதவியது. இன்றும் வாழும் வாரிசுகளுடன் மேலும் ஆதாரம் வெளியே வரும்.
சென்னையின் கல்வி மற்றும் புண்ணிய காரியங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வன்னிய நாயக்கர் டிரஸ்டுகள்
வன்னியகுல க்ஷத்ரிய பிள்ளைகள் படிக்க காஞ்சிபுரத்திலும் ஆரம்ப கல்வி நிலையத்தை தொடங்கினார்.1903ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் வன்னிய மாணவர்கள் கல்வி பயில ரூபாய் 3000 செலவிட்டு இலவச பள்ளியை தொடங்கினார்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை கண்ணென காத்து வளர்க்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூறுவார்.ஏழை மாணவர்கள் படித்து முன்னேற வேண்டுமென, திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம், மதுராந்தகம் ஆகிய மூன்று ஊர்களில் தொடக்கக்கல்வி பயில, தம் சொந்த செலவில் கல்வி நிறுவனங்களை தொடங்கிய புன்னமை தியாகராய நாயகர்,சென்னை வன்னியகுல க்ஷத்ரிய மகா சங்கத்திடம், ரூபாய் 8000 ஒப்படைத்து 17.01.1894 ல் விருப்பாவனம் எழுதினார். ரூபாய் 8000த்தில் வரும் வட்டியை கொண்டு கல்வி சாலைகளை பராமரிக்குமாறு உயிலில் (சிலாசனம்) குறிப்பிட்டுள்ளார்.
தம் குடும்பத்தின் சந்ததியாரில் ஒருவரை சேர்த்துக்கொண்டு, இந்த தருமத்தை பழுதுவராமல் செய்ய வேண்டுமென திருக்கழுக்குன்றத்தில் கல்வெட்டில் (சிலாசனம்) எழுதியுள்ளார்.இதை செய்ய தவறினால், சிவ துரோகம் செய்தவர் போகும் பாவத்திற்கு உள்ளாவார்கள், இது சத்தியம், சத்தியம் கடவுள் துணை என்றும் கல்வெட்டில் பொறித்துள்ளார்.நாயகர் அவர்கள் நாட்டியிருக்கும் பெரியதோர் சிலாசாசனங்களையும், குலாபிமானத்தையும் பார்வையிட்ட மகா சங்கத்தார் " வன்னி குலோபகாரி " என்ற பட்டத்தை ஐயா புன்னமை தியாகராய நாயகர் அவர்களுக்கு மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.
" அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் " என்றதற்கேற்ப ஏழைகள் படிக்க, மூன்று கல்வி நிறுவனங்களை நிறுவிய வள்ளல் புன்னமை தியாகராய நாயகர் 28.06.1906ஆம் ஆண்டு மறைந்தார்.
கோவிந்து நாயக்கர் அறக்கட்டளை:
அவர்களுக்கு உரிய வரலாற்று குறிப்புக்களில் தமரா என்றும் சென்னையை பற்றி குறிப்பிடும் போது மட்டுமே தாமர்லா என்று கதை எழுதி இல்லாத வரலாறை ஒரு சிறிய பகுதியை ஆட்சி செய்தவருக்கு கொடுக்க ஆதாரமாக பிரிட்டிஷ் ஆவணங்களை 1800 பின்னர் தொகுத்த அரைகுறை ஆவணங்களை வைத்து சென்னையை உரிமை கொண்டாட இவர்களை கொண்டுவந்து இணைக்கும் - இணைத்த கேடுகெட்டவர்கள் இனியாவது தெலுங்கர் வரலாறு என்று கூவுவதை நிறுத்த வேண்டும். வன்னியர் வரலாறாக இருக்க கூடாது என்று கதறும் தெற்கத்தி கூட்டத்துக்கு சொல்வதும் ஒன்றே ஒன்று தான். ஓட்டு மொத்த சென்னையும் வன்னியர் சொத்துக்களை அதிகமாக கொண்ட வன்னியர் மண் மட்டுமே.
காளஹத்தி ஜமீன் பகுதியின் எல்லையாக கொடுக்கப்பட்ட குறிப்புகள் :
1577ம் வருடம் தாது வருடம் எழுதப்பட்ட குறிப்புகளாக பிரிட்டிஷ் காரருக்கு காளஹஸ்தி ஜமீன் மானேஜர் கொடுத்த தகவலாக குறிக்கப்பட்டு உள்ள எல்லை குறிப்புகள்.
ஸ்ரீ ரங்கராய சந்திரகிரியில் இருந்து ஆட்சி செய்யும் காலத்தில் எல்லை பகுதியாக குறிக்கப்பட்ட பகுதிகள் .
காளஹஸ்தி எல்லை பகுதியின் வரைபடம்:
கி பி 1625 ம் ஆண்டு தென் பகுதியில் மசூலிப்பட்டினத்திற்கு அடுத்த முதல் பிரிட்டிஷ் வணிக மையம் ஆன ஆறுமுகம் என்ற துறைமுகப்பட்டினம்.
இந்த துறைமுகம் பகுதி வெங்கடகிரி அரசரால் ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது.
The English East India Company and Trade in Coromandel, 1640-1740
என்ற ஆவணத்தில் இருந்த குறிப்புகள் :
மசூலிப்பட்டினத்தில்முதன் முதலில் கி பி 1611 ல் ஆரம்பித்த வணிகத்துக்கு தடையாக அந்த பகுதியின் ஆட்சியாளர்களும், அங்கே வாங்கப்படும் பொருட்களின் தரமும் சரியாக இல்லாத காரணமும், அந்த காலகட்டத்தில் உருவான பெரிய பஞ்சமும், டச்சுக்காரர்களின் முறையற்ற வணிகமும் அந்த பகுதியில் இருந்து வெளியேறமுடிவு செய்தனர். அதனால் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு பகுதியில் நிரந்தரமாக ஒரு வணிகமையம் அமைக்க இடம் தேட ஆரம்பித்தனர்.
கி பி 1626 ம் ஆண்டு ஆறுமுகம் என்ற வெங்கடகிரி அரசுக்கு சொந்தமான பகுதியில் தங்கள் வணிக மையத்தை ஆரம்பித்தனர்.
கிருஷ்ணபட்டினம் துறைமுகத்துக்கு தெற்கு பகுதியில் அமைந்த ஆறுமுகம் என்ற துறைமுகம் பெரிய கப்பல்களை ஆற்று முகத்துவாரத்தில் நிறுத்த வசதியான பகுதி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பக்கத்து கிராமங்களில் நடைபெறும் தறி தொழிலால் துணி ஏற்றுமதிக்கு சிறந்தஇடம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பழவேற்காடு பகுதியில் அமைந்த டச்சு வணிக குழுவினால் ஏற்படும் பிரச்சனைகளால் ஆறுமுகம் பகுதி வணிகத்திற்கு உதவியாக இல்லை என்று மாற்று இடம் தேடும் முயற்சியில் இருந்தனர்.
பழவேற்காடு பகுதியில் டச்சுக்காரர்கள் அமைத்த கோட்டை -வணிக தளத்தின் வரைபடம்.
மாற்று இடம் தேடும் நேரத்தில் பழவேற்காடு முதல் சாந்தோம் வரை உள்ள கடற்கரை பகுதிகளின் வலிமைமிக்க ஆட்சியாளர் ஆன தாமல்(தாமர்ல) வெங்கட்டப்ப நாயக்கர் மதரசன் பட்டினம் பகுதியில் வணிகமையம் அமைக்க அழைப்பு விடுத்தார். அதை ஏற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற நிரந்தர வணிக மையத்தை ஆரம்பித்தனர். ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி இதுவரை சந்தித்த உள்ளூர் ஆட்சியாளர்களின் தொல்லை, கடிமையான பஞ்சம், டச்சுக்காரர்களின் போட்டி நடவடிக்கைகளில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை உதவியாக இருந்தது.
ஏற்றுமதி - இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்தும் பொருட்கள் வெளியே செல்லும் போது அந்த பகுதி நாயகர்களுக்கு சுங்கவரி செலுத்தும் படி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆறுமுகம் பகுதியும் அதன்ஆட்சியாளர்களும் கி பி 1640 ம் ஆண்டு கோல்கொண்டா முஸ்லீம்களின் ஆட்சியின் கீழ் சென்றதையும் அங்கு இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாறியதையும் சரியான இடத்தை தேர்ந்து எடுத்ததாக கிழக்கு இந்திய கம்பெனி ஆவணம் குறிப்பிடுகிறது.
கி பி 1639 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ம் நாள் எழுதப்பட்ட சென்னப்பபட்டினம் பத்திர ஆவணம்:
ஆகஸ்ட் 22 ம் தேதி 1639ம் ஆண்டு தாமல் வெங்கட்டப்ப நாயக்கர் கொடுக்கப்பட்ட பத்திர ஆவணம் .
தாமல் வெங்கடப்ப நாயக்கர் ஆறுமுகம் பகுதியில் வணிக அமைப்புக்கு தலைவராக இருந்த பிரான்சிஸ்டேவுக்கு கொடுத்த அனுமதி பத்திரம் . கிழக்கு இந்திய கம்பெனியின் சார்பில் அவர்களின் வணிகத்திற்காக மதராசன் பட்டணத்தில் கோட்டை கட்டி கொள்ள இந்த நாள் முதல் அனுமதித்தும், ஆறுமுகம் பகுதியில் இருந்த போது மதராசன் பட்டிண துறைமுகத்தை பிரான்சிஸ்டே சரிசெய்து கொடுத்ததையும் பற்றிய தகவல் இடம் பெற்று உள்ளது. இப்படி நட்பாக இருந்தவர்களின் வணிகம் எங்கள் பகுதிகளில் தொடங்க அவருக்கு அழைப்பு விடுத்ததும் இந்த ஆவணத்தில் உள்ள படி அனுமதி அளிக்கின்றோம்.
இந்த ஆவண உடன்படிக்கையின் படி கோட்டை மற்றும் ஆயுதம் தாங்கிய கோட்டையும் மதராசன் பட்டிணத்தில் அவர்களுக்கு தேவையான இடத்தில் கட்டிக்கொள்ளவும், அந்த இடத்திற்கான பணம் கோட்டை முழுமை அடையும் வரை விலக்கு அளிக்கப்படுவதாகவும், அந்த கோட்டையை பயன்படுத்த தொடங்கும் போது பணம் செலுத்தவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆவண உடன்படிக்கையின் படி கோட்டை மற்றும் ஆயுதம் தாங்கிய கோட்டையும் மதராசன் பட்டிணத்தில் அவர்களுக்கு தேவையான இடத்தில் கட்டிக்கொள்ளவும், அந்த இடத்திற்கான பணம் கோட்டை முழுமை அடையும் வரை விலக்கு அளிக்கப்படுவதாகவும், அந்த கோட்டையை பயன்படுத்த தொடங்கும் போது பணம் செலுத்தவும் கூறப்பட்டு உள்ளது.
பிரான்சிஸ்டே அல்லது கம்பெனியின் ஏஜென்ட்கள் யார் பதவியில் இருந்தாலும் கோட்டை அமைத்த பின்னர் மதரசாப்பட்டினம் பகுதியை இரண்டு வருடங்கள் ஆட்சி செய்யலாம் என்றும் அதன் பின்னர் வரும் சுங்கம் மற்றும் ஏற்றுமதி வருமானத்தில் சரிபாதியாக கொடுக்கவும், அதன் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சுங்கவரி குறிப்பிடப்பட்ட இரண்டு வருடங்களுக்கு பின்னர் நீக்கப்படும் என்றும். தங்கள் ஆட்சி பகுதி வழியாக அல்லது மற்ற நாயக்கர்களின் ஆட்சி பகுதி வழியாக நடைப்பெறும் வணிக பொருள்கள் இடமாற்றம் போன்றவற்றிக்கு மற்ற வணிகர்கள் செலுத்தும் தொகையில் பாதி அளவு செலுத்தும்படி கூறப்பட்டு உள்ளது.தங்களுக்கு தேவையான நாணயங்களை அவர்களே தயாரித்து கொள்ளவும் அதற்கும் வரி விலக்கு வழங்கப்பட்டு உள்ளது.
கிழக்கிந்திய கம்பெனி வியாபாரிகள்,
பெயிண்ட்கள், நெசவாளர்கள் இவர்களுக்கு பணம் கொடுக்கும் முன்னர் தங்களுக்கு தகவல் கொடுக்கவேண்டும் என்றும் தங்கள் பகுதியில் வசிக்கும் அவர்களுக்காக நேர்மையான வணிகத்திற்கு தேவையான உறுதியை அளிப்பதாகவும்,
கம்பெனியுடன் வணிகம் செய்பவர்களின் பணம் அவர்களின் கணக்கில் வைத்து கொள்ள வேண்டும் என்றும் அவ்ர்கள் எங்கள் ஆட்சி பகுதியில் இருந்தால் அவர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கிழக்கிந்திய கம்பெனி எங்கள் பகுதியில் இருந்து கப்பல் மற்றும் துறைமுகதிற்கு வாங்கும் பொருட்களுக்கு சுங்கம் மற்றும் வரிவிலக்கு அளிக்கபடுவதாகவும், கிழக்கிந்திய கம்பெனி அல்லது வேறு நாட்டின் படகு அல்லது கப்பல் மற்ற கப்பல் மீது மோதி சேதம் ஏற்படுத்தினால் தங்கள் ஆட்சி பகுதியில் இருந்து வெளியே அனுப்பியும் அப்படி சேதம் ஏற்படுத்தியவர்கள் அந்த கப்பலில் இருந்த பொருட்களுக்கான பணம் செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இப்படி எழுதப்பட்ட ஆவணம் விஜயநகர அரசரான வெங்கடபதி மகாராயரால் அதே நாளில் உறுதி செய்தார் என்றும் அவர் அளித்த தங்க தகடால் ஆன ஆவணம் கவர்னர் கிப்போர்ட் மூலம் கி பி 1687 ம் ஆண்டு அடுத்து பதவிக்கு வந்தவரிடம் கொடுக்கப்பட்டு கி பி 1693 ம் ஆண்டு சூரத் கொண்டு செல்லும் போது கடல் பயணத்தில் காணாமல் போனது.
கோட்டை பகுதியில் வளர்ந்து வரும் புதிய நகரம் வெங்கடப்ப நாயக்கரின் தந்தை சென்னப்பநாயக்கரின் பெயரால் சென்னப்பட்டினம் என்று பெயர் சூட்டப்பட்டது.
சென்னப்ப நாயக்கர் பட்டினம் கோட்டையின் அமைப்பு கப்பல்களோடு டச்சு ஆவணத்தின் புகைப்படம்.
விஜயநகர பேரரசின் கடைசி மன்னர் என்று எழுதப்பட்ட குறிப்பில் உள்ள தகவல் :
விஜயநகர கடைசி ஆட்சி காலத்தில் அரசு முழுவதும் தாமல் சகோதரர்கள் ஆன வெங்கடப்ப நாயக்கர் ,அக்கப்ப நாயக்கர் கையில் இருந்தது என்றும் இருவரும் அரசரான வெங்கடபதி ராயரின் மைத்துனர்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வந்தவாசியின் ஆட்சியாளராக இருந்த தாமல் வெங்கட்டப்ப நாயக்கரின் கையின் முழு அதிகாரமும் இருந்தது என்றும் முக்கிய அமைச்சர் என்றும் கடற்கரையில் இருக்கும் ஐரோப்பிய கம்பெனிகள் அவரை LORD GENERAL OF CARNATAK - கர்நாடக அரசரின் தளபதி என்று குறிப்பிடுவதாக கூறப்பட்டு உள்ளது. வந்தவாசி பகுதியின் வருமானம் என்று 6000-9000 பகோடா என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஸ்ரீ ரங்கநாயக்கர் திருப்பதி பகுதியின் கவர்னர் என்றும் வடக்கு பகுதியின் ஆட்சியாளர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளார்.மற்ற பகுதியின் ஆட்சியாளர்களிடம் ரங்கராயருக்கு போதிய ஆதரவு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வெங்கடபதிராயர் இறந்த பின்னர் ரங்கராயர் ஆட்சி பொறுப்பு ஏற்பதை தாமல் வெங்கடப்ப நாயக்கர் எதிர்த்தார் என்றும் அவரை LORD CHANCELLOR OF THE CARNATAK என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கிழக்கு இந்திய கம்பனியின் குறிப்புகளில் கோல்கொண்டா படையினர் மொத்த நாட்டையும் பிடித்ததும், ஆறுமுகம் பகுதியை ரங்கராயர் கைப்பற்றியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வெங்கடபதிராயர் இறந்த பின்னர் கி பி 1642 ல் ஸ்ரீ ரங்கராயர் பதவி ஏற்றார்.
தாமல் வெங்கடப்ப நாயக்கர் கோல்கொண்டா படைகளுக்கு ஆதரவாக இருந்த தாக கூறி அவரை கைது செய்து அவரது ஆட்சி பகுதிகள் அவரிடம் இருந்து எடுக்கப்பட்டுது. பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றும் உள்ள மாவட்டங்கள் மட்டும் கொண்ட பகுதி மட்டுமே ஆட்சி பகுதியாக இருந்தது.
கோல்கொண்டா படையின் கையில் மொத்த நாடு சென்றதும், நமது நாயக்கருக்கு புதிய அரசனின் ஒத்துழைப்பும் மரியாதையும் கிடைக்காததை தொடர்ந்து மூர் முஸ்லிம்களின் ஆதரவுடன் தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தம்பி படையெடுத்து செல்வதை அறிந்து வெங்கப்பட்ட நாயக்கர் விடுதலை செய்யப்பட்டார்.
தஞ்சை,மதுரை,செஞ்சி நாயக்கர்கள் ஸ்ரீரங்கராயரை கி பி 1645 ம் டிசம்பர் மாதம் தோற்கடித்தனர். ஜனவரி 21 1646 ம் ஆண்டு கவர்னர் கிரீன்ஹில் ஸ்ரீ ரங்கராயரை வேலூர் கோட்டையில் சந்தித்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஒப்பந்தத்தை புதிப்பித்து கொண்ட தகவல் பிப்ரவரி 26 ம் தேதி குறிப்புகளில் உள்ளது.
ஸ்ரீரங்கராயர் பீஜப்பூர் முஸ்லிம்களின் படையெடுப்பில் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு அதிகமான செல்வத்தை கொடுத்து காப்பற்றிக் கொண்டதாக டச்சு குறிப்புகள் கூறுகின்றது.
கிழக்கிந்திய கம்பெனி ஸ்ரீ ரங்கராயரிடம் செய்து கொண்ட புதிய ஒப்பந்தம் கி பி 1645 நவம்பர்:
ஸ்ரீ ரங்கராயர் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை கேப்டன் ஆன தாமஸ் இவிய் மூலம் செய்து கொடுத்த உரிமை பத்திரம்.
வெங்கடப்ப நாயக்கர் செய்து கொடுத்த ஒப்பந்ததின் படி உள்ள எல்லாமும் இந்த புதிய ஒப்பந்தத்தில் உள்ளது.அதோடு பட்டணத்திற்கு தன் பெயரான ஸ்ரீ ரங்கராய பட்டினம் என்று வைக்க வேண்டும் என்றும் புதிதாக நரிமேடு பகுதியும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. புதிதாக அரசு நிர்வாகம் மற்றும் நீதிமன்ற நிர்வாகமும் கொடுக்கப்பட்டது. பூந்தமல்லி மற்றும் சுற்று பகுதி நாயக்கர்கள் தொல்லை கொடுத்தால் ராயர் உதவி செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எங்கள் பாதுகாப்பு இந்த புதிய நகர்(டவுன்) பகுதிக்கு மட்டுமே என்றும் பூந்தமல்லி அல்லது மற்ற நாயக்கர்களின் ஆட்சி பகுதிக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு பாதி சுங்கவரி செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தாமல் வெங்கடப்ப நாயக்கரின் மகன்கள் அய்யப்ப நாயக்கர் , திம்மப்ப நாயக்கர் என்று குறிப்பிடப்பட்ட திம்மப்ப நாயக்கரின் மகள் எழுதிய கடிதம்.
திம்மப்பநாயக்கரின் மகள் பச்சை பாப்பம்மாள் தன்னை சென்னப்ப நாயக்கரின் கிரேட் கிராண்ட் டாட்டர் ( கொள்ளு பேத்தி) என்று குறிப்பிட்டு எழுதியகடிதம்
(FAC REC FORT ST GEORGE VOL XXVI 8 TH MARCH 1671/2)
என் தாத்தாவின் அப்பாவின் பெயரால் அமைக்கப்பட்ட சென்னப்பட்டினம் நகரத்தில் வசிக்கும் எங்கள் உறவினர்களுக்கு கம்பெனி செய்து கொடுத்த உதவியும் அவர்கள் கம்பெனிக்கு செய்த உதவியும் சென்னப்பநாயக்கரின் பெயரையும் நினைவையும் அனைத்து நாடுகளுக்கும் உங்கள் நாடுமூலம் கொண்டு செல்ல உதவும். இதன் மூலம் உலகில் உள்ள நாடுகளுக்கு எங்கள் தாத்தாவின் தந்தை பெயர் அவரது சாம்பல் உலகில் பரவியது போல் நிலைத்து நிற்கும். என்னால் முடிந்தவரை இந்த நகரத்தின் வியாபாரம் செழிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று சர் வில்லியம் லாங்ஹோர்ன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியதாக குறிப்பு.
அய்யப்ப நாயக்கரின் மகன் : வெங்கடாஜலபதி நாயக்கர்.
கி பி 1703 ம் ஆண்டு டிசம்பர் 13 ம் தேதி சென்னப்பட்டினம் என்று முதலில் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாடகை ஒப்பந்தம் செய்த வெங்கடப்ப நாயக்கரின் பேரன் கவர்னரை சந்திக்க வருவதாக செய்தி அனுப்பி இருந்தார்.
முன்னாள் கவர்னர் காலத்தில் இருந்து வேலையில் இருக்கும் கம்பெனியின் பழைய வேலைக்காரர்கள் கொடுத்த தகவல் இவரது தந்தை கவர்னரை சந்திக்க வரும் போது அவருக்கு மிகுந்த மரியாதையும் அன்பளிப்புகளும் கொடுத்ததாக கூறி தகவலை ஏற்று வெங்கடாஜலபதி நாயக்கருக்கும் தகுந்த மரியாதை செய்ய முடிவு எடுத்தனர்.
5 யார்டு சிவப்பு கம்பள வரவேற்புடன் இரண்டு கத்தியும் 110 பக்ஸ் தங்க சங்கிலியும், ஒரு சிறிய பைனாகுலர் கொடுத்து சிறப்பித்ததாக குறிப்புகள் உள்ளது.
P.C VOL XXXII .. 13th DEC 1703
அய்யப்ப நாயக்கரின் பேரன் : வெங்கடபதி நாயக்கர்
திருவெற்றியூரில் வசிக்கும் வெங்கடபதி நாயக்கர் சென்னப்பட்டினத்தை அளித்த வெங்கட்டப்ப நாயக்கரின் பேரன் என்றும் அவர் கவர்னரை சந்திக்க விரும்புவதாக செய்தி அனுப்பு உள்ளார். அவர் தந்தை கவர்னர் பிட் அவர்களை சந்திக்க வந்தபோது தங்க சங்கிலியும் மற்ற பரிசுகளும் கொடுக்கப்பதை குறிப்பிட்டு இருந்தார்.
இவருக்கும் அதே மாதிரியான வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.40 பகோடா மதிப்புடைய தங்கச்சங்கிலியும் மற்ற பரிசுகளும் கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
எல்லா பரிசுகளும் கொடுத்து கெளரவப்படுத்தி 15 துப்பாக்கி முழங்க மரியாதை செலுத்தினர்.
P.C VOL 1IV 3rd MARCH 1723/4
கிபி 1743 ம் ஆண்டு பத்தொன்பது வருடங்களுக்கு பின்னர் தாமல் வெங்கடபதி நாயக்கர் மீண்டும் ஒருமுறை பிரசிடெண்ட்டை சந்திக்க வருவதாக செய்தி அனுப்பினார். கி பி 1724 ம் ஆண்டு செய்யப்பட்ட மரியாதையை அவருக்கு கொடுக்க முடிவு செய்தனர். முன்னர் கொடுத்ததை போலவே தங்கச்சங்கிலி மற்றும் பரிசுகளும் கொடுத்தனர்.
சென்னையின் முதல் பாளையக்காரர் :
மதராசபட்டிணத்தின் பாளையக்காரர் கொடுங்கையூர் பெத்த நாயக்கர் கவர்னர் ஹோபர்ட்க்கு எழுதிய கடிதம் .
கம்பெனியால் வழங்கப்பட்ட ஆவணத்தின் படி வணிகர்களிடம் இருந்து வரிவசூலிக்க நிறைய பியூன்களை கொண்டு கடற்கரையில் கொண்டுவரும் பொருட்களும் மற்ற ஏற்றுமதி பொருட்களையும் பாதுகாக்க பயன்படுத்தவும். வண்ணாரப்பேட்டை பகுதியில் கம்பெனியின் துணியை பாதுகாக்கவும், போலீஸ் பியூன் கொண்டு கருப்பு நகரத்தை காவல் காக்கவும் நடைபெற்று வந்ததையும் அது தடைபட்ட தகவலை கூறும் கடிதம் .
கொடுங்கையூர் அங்கப்பநாயக்கர் பாளையக்காரராக செய்யவேண்டிய கடமைகளை குறிப்பிட்ட பத்திரம்.
1. மதராஸ் நகரத்தின் காவல்காரராகவும் வண்ணாரபேட்டை பகுதிவரை உள்ள பகுதியை பாதுகாக்க 100 க்கும் அதிகமான காவல்காரர்களை நியமித்து திருட்டை தடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் அவர்களின் சம்பளம் மற்றும் அவர்களை பராமரிக்க தேவையான பணத்திற்கு வரியை வசூலிக்க பின் வருவும் வருமானங்களை குறிப்பிட்டு உள்ளது.
2. சுங்கம் பகுதிக்கு வரும் பொருட்களை கொண்டுவரும் உள்நாட்டு வணிகர்களிடம் ஒரு பகோடா மதிப்பு உள்ள ஒரு பாக்கெட் பொருட்களுக்கு
7 1/2 பணமும், எடையுடன் கூடிய பொருளுக்கு ஒரு பகோடா மதிப்புக்கு 20 பணமும் வசூலிக்கவும்,
3. ஐரோப்பியரை தவிர்த்து மற்ற அனைத்து வியாபாரிகளிடமும் கடற்கரை சுங்கமாக தனி பொருட்கள், பட்டு துணிக்கான நூல்,மருந்து,தானியம்,
விளக்கு எரிக்க தேவையான விதைகளுக்கு ஒரு பகோடா மதிப்பு உள்ள பொருளுக்கு 27 1/2 பணமும், நெல், அரசி ,மரம்,சட்டம் ,பனைமரம் ,செம்மரம் இவற்றிக்கு ஒரு பகோடா மதிப்பிற்கு 7 1/2 பணமும் வசூலிக்கவும்,
4.நகரத்தில் வசிக்கும் நகரவாசிகளில் ஐரோப்பியரை தவிர்த்து மற்றவர்கள் பெரிய வீடாக இருந்தால் 3 பணமும், சிறிய வீடாக இருந்தால் 2 பணமும் வசூலிக்கவும்,
5.கவர்னர் கூறிய படி வேலைக்கு வைக்கப்பட்ட பியூன்களை பாதுகாக்கவும், அமைதிக்காகவும் பயன்படுத்த வேண்டும்,
6.சுங்கம் வசூலிக்க பட்டவரிடம் இருந்து பொருள் திருட்டு போனால் பொருளை இழந்தவர்கள் இரண்டு மாதத்துக்குள் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் அப்படி தவறும் போது கவர்னர் அல்லது நீதிபதி மூலம் நடவடிக்கை எடுத்து பாளையக்காரரிடம் இருந்து வசூலிக்கபடும் என்றும்,
7. வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிகளை பாதுகாக்க ஒரு பகோடா மதிப்புக்கு 7 1/2 பணம் கொடுக்கவும்,காணாமல் போகும் துணிக்கான மதிப்பை இழப்பீடாக தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ள உடன்படிக்கை.
சென்னையின் முழுபாதுகாப்பும் போலீஸ் துறை - துறைமுக சுங்க வசூல் செய்வது, வீடுகளுக்கு வரிவசூல் செய்வது போன்ற அதிகாரம் மிக்க பதவியில் கொடுங்கையூர் வன்னிய நாயக்கர்கள் கையில் மட்டுமே இருந்து உள்ளது. திருவொற்றியூர் காடவராய அரசர்களின் வாரிசான பெத்த நாயக்கரும் அவர் மகன் அங்கப்ப நாயக்கரும் சென்னை பகுதியின் முதல் பாளையக்காரர்கள். சென்னைக்கு சம்பந்தமே இல்லாத வரலாற்றை திணிக்கும் இந்த வரலாற்று திருடர்கள் செய்த ஒரே நன்மை உண்மையான வரலாறு தேடி எடுக்க உதவியது. இன்றும் வாழும் வாரிசுகளுடன் மேலும் ஆதாரம் வெளியே வரும்.
சென்னையின் கல்வி மற்றும் புண்ணிய காரியங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வன்னிய நாயக்கர் டிரஸ்டுகள்
புன்னமை தியாகராய நாயகர்:
செங்கற்பட்டு மாவட்டம் சீர்வாடி அருகேயுள்ள புன்னமை என்னும் கிராமத்தில் முருகப்ப நாயகர் அவர்களுக்கு மகனாக 1840ல் பிறந்தார்.கட்டிட மேஸ்திரி, கான்ட்ராக்டராக இருந்தார். மேலும் சென்னை முத்தியால்பேட்டையில் இரும்பு வாணிகமும் செய்தார். தான் ஈட்டிய பெரும் செல்வத்தை கொண்டு, ஆன்மீகத்தொண்டு, கல்வித்தொண்டு, குலத்தொண்டு என புண்ணிய காரியங்கள் பல செய்துள்ளார்.வன்னியகுல க்ஷத்ரிய பிள்ளைகள் படிக்க காஞ்சிபுரத்திலும் ஆரம்ப கல்வி நிலையத்தை தொடங்கினார்.1903ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் வன்னிய மாணவர்கள் கல்வி பயில ரூபாய் 3000 செலவிட்டு இலவச பள்ளியை தொடங்கினார்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை கண்ணென காத்து வளர்க்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூறுவார்.ஏழை மாணவர்கள் படித்து முன்னேற வேண்டுமென, திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம், மதுராந்தகம் ஆகிய மூன்று ஊர்களில் தொடக்கக்கல்வி பயில, தம் சொந்த செலவில் கல்வி நிறுவனங்களை தொடங்கிய புன்னமை தியாகராய நாயகர்,சென்னை வன்னியகுல க்ஷத்ரிய மகா சங்கத்திடம், ரூபாய் 8000 ஒப்படைத்து 17.01.1894 ல் விருப்பாவனம் எழுதினார். ரூபாய் 8000த்தில் வரும் வட்டியை கொண்டு கல்வி சாலைகளை பராமரிக்குமாறு உயிலில் (சிலாசனம்) குறிப்பிட்டுள்ளார்.
தம் குடும்பத்தின் சந்ததியாரில் ஒருவரை சேர்த்துக்கொண்டு, இந்த தருமத்தை பழுதுவராமல் செய்ய வேண்டுமென திருக்கழுக்குன்றத்தில் கல்வெட்டில் (சிலாசனம்) எழுதியுள்ளார்.இதை செய்ய தவறினால், சிவ துரோகம் செய்தவர் போகும் பாவத்திற்கு உள்ளாவார்கள், இது சத்தியம், சத்தியம் கடவுள் துணை என்றும் கல்வெட்டில் பொறித்துள்ளார்.நாயகர் அவர்கள் நாட்டியிருக்கும் பெரியதோர் சிலாசாசனங்களையும், குலாபிமானத்தையும் பார்வையிட்ட மகா சங்கத்தார் " வன்னி குலோபகாரி " என்ற பட்டத்தை ஐயா புன்னமை தியாகராய நாயகர் அவர்களுக்கு மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.
" அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் " என்றதற்கேற்ப ஏழைகள் படிக்க, மூன்று கல்வி நிறுவனங்களை நிறுவிய வள்ளல் புன்னமை தியாகராய நாயகர் 28.06.1906ஆம் ஆண்டு மறைந்தார்.
கோவிந்து நாயக்கர் அறக்கட்டளை:
ரூ. 2000 கோடிகோவிந்து நாயக்கர் அறக்கட்டளை
வன்னியர்சமூகத்தின்வள்ளல்களில் ஒருவர் கோவிந்து நாயக்கர். இந்த அறக்கட்டளையை காப்பாற்ற சட்டப்போராட்டம் கொண்டு போராடியவர் பெரியவர் : திருஞானம் பெருமாள் அவர்கள் .
2000 கோடி ருபாய் மதிப்புள்ள இவரது சொத்துக்களை பச்சையப்பன்
அறக்கட்டளையிலிருந்து,பிரித்து, சுயமாக இயங்கவும்
நாயக்கரின் உயிலில்உள்ளஅம்சங்களை நிறைவேற்றவும்.. பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் கோவிந்து நாயக்கர் சொத்து மற்றும் அனைத்து ஆவணங்களையும் 2017 ம் ஆண்டு செப்டம்பர் 22- ம் தேதிக்குள் ஓய்வு பெற்ற நீதிபதியான சித்ரா வெங்கட்ராமனிடம்
ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பாகியுள்ளது
பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் உயில்..
எனது சொத்துகளை வைத்து பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் எஸ்டேட் ட்ரஸ்ட் அமைக்க வேண்டும். அதில்..
1) பெற்றோர் இல்லா குழந்தைகள் கல்வி கற்க உணவு இருப்பிடத்துடன் பள்ளி அமைக்க வேண்டும்..
2) ஆதரவு இல்லா ஆண் பெண்களுக்கு வாழ்வு ஊதியம் தரவேண்டும். ஆசிரமம் அமைக்க வேண்டும்.
3) தொழில் கல்வி நிலையம் அமைக்க வேண்டும்.
4) பல்தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும்.
5) ஆங்கில மருத்துவமும் தமிழ் சித்த மருத்துவமும் இணைந்த மருத்துவமனை அமைக்க வேண்டும். அதில் தங்கும் வசதி, உணவு வசதியோடு இலவச மருத்துவம் தரவேண்டும்.
6) இன்னும் வருவாய் இருந்தால் மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்.
7) இவை அனைத்தையும் சாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் செய்ய வேண்டும்..
150 ஆண்டுகளுக்கு முன்பே 1870 ல், 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அசையும் சொத்துகளும் பிற அசையா சொத்துகளையும், இன்றைய மதிப்பில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் தமிழர்களுக்கு விட்டு சென்றார் பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர்..
செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரி :
ஆயிரம் காணி ஆளவந்தார் நாயக்கர்: கோவளம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள கடற்கரை பகுதிக்கு சொந்தக்காரர்.
சென்னையில் பல அரசு அலுவலகங்கள், அதிக ஆக்ரமிப்புகள், குறிப்பா சென்னையின் தண்ணீர் தேவைக்காக இயங்கி வரும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் நெம்மேலி ஆயிரம் காணி ஆளவந்தார் நாயக்கரின் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள்.இந்த சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கூட அவரின் பெயரை வைக்காமல் திருட்டுத்தனம் செய்யும் திராவிட புத்திரர்கள்.
ஆயிரம் காணி ஆளவந்தாரின் பெயரை கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வைக்க கூட வைக்காமல் இருக்கும் தமிழக அரசுக்கு அவர் பெயரை கோரிக்கை வைக்கும் நிலையில் தான் இருக்கிறோம்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் வன்னிய நாயக்கர்கள் :
சர்தார் பு.ம.ஆதிகேசவ நாயக்கர்:
இவர் பெயருக்கு முன்னாள் இருக்கும் சர்தார் பட்டம் ஆங்கில அரசு வழங்கியதல்ல . இவரது துணிவையும் மக்கள் சேவையும் பாராட்டி மாகத்மா காந்தி வழங்கிய பட்டமாகும் . தமிழகத்தில் இவரும் சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் காந்தியிடம் இப்பட்டத்தை பெற்றவர்கள்.
ஆதிகேசவ நாயகர் தனது 27 வது வயதிலேயே -
1.மதராஸ் சதர்ன் மராட்டா ரயில்வே யூனியன்
2.சதர்ன் ரயில்வே யூனியன்
3.ரயில்வே யைங்க்மன் யூனியன் ஆகிய முன்று தொழிழ்ச்சங்கங்களை தோற்றுவிட்டு அவைகளின் தலைவராகி தொண்டாட்டாற்றியவர் .
1921 இல் பம்பாய் சென்று காந்தியடிகளை சந்தித்து தமிழகத்திற்க்கு அழைத்துவந்து மெரீனா கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்தினார். காந்தியடிகளை அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரை நிகழ்த்தியவர் ஆதிகேசவ நாயகர்.மீண்டும் சிறையில் இருந்து விடுதலையான காந்தியை சென்னைக்கு அழைத்து வண்டு 21.12.33 அன்று ராபின்சன் பூங்காவில் சிறப்பான வரவேற்பு கொடுத்தார் . காந்தியின் ஆங்கில உரையை தமிழாக்கம் செய்தார்.1921, 36 ஆகிய ஆண்டுகளில் நேரு தமிழக சுற்றுபயணம் மேற்கொண்ட போது; அவருடன் தமிழகம் முழுவது பிரச்சாரம் செய்தவர் நாயக்கர் .

காந்தியடிகள் அறிவித்த வரிகொடா இயக்கத்தை தீவிரமாக ஆதரித்து சென்டிரல் ரயில் நிலையம் அருகில் இருந்த தனது நூற்றுகணக்கான ஏக்கர்களுக்கு வரிக்கட்ட மறுத்ததால் அந்த நிலங்களை அரசு எடுத்து கொண்டது . அந்த நிலங்களின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடி.
காந்தியடிகள் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தீவீரமாக பங்காற்றி பல முறை சிறை சென்றுள்ளார். இவர் மொத்தம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். காமராசரே கூட 9 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடதக்கது .
இப்படி -தமிழகத்தின் ஒப்பற்ற சுதந்திர போராட்ட போராளியாக விளங்கிய சர்தார் பு.மு.ஆதிகேசவ நாயகருக்கு சென்னையில் எங்குமே சிலை இல்லை .ஆனால் இங்கு யார் யாருக்கோ பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது, வன்னியர் வரலாறு இங்கு தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது அதற்கு சர்தார் பு.மு.ஆதிகேசவ நாயகர் வரலாறு ஒன்றும் விதிவிலக்கல்ல
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றிய வன்னிய நாயக்கர் :
நாம் அனைவருக்கும் கொடிகாத்த குமரன் தெரியும்! ஆனால் கோட்டையில் கொடியேற்றிய வீரனைப் பற்றி தெரியுமா??
மதராசப்பட்டினம் படத்தில் சிலர் பிரிட்டிஷ் கொடியை கீழிறக்கிவிட்டு, மூவர்ணக் கொடியை பறக்க விடுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்..
அந்த காட்சி கதையல்ல உன்மை சம்பவம்!! 1929-ம் ஆண்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்யைில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியை இறக்கிவிட்டு, முதன்முதலாக அங்கு தேசியக் கொடியை ஏற்றியவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த முனுசாமி நாயகர் என்ற வன்னியர்..
இதனால் ஆத்திரமுற்ற ஆங்கிலேயர்கள் அவரை வண்டலூர் காட்டுக்குள் இழுத்துச் சென்று கட்டை விரல்களை வெட்டிவிட்டனர்! அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் அவர் இறந்துவிடுகிறார்..
இதையெல்லாம் வசமாக மறைத்துவிட்டு 1932-ல் தான் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டதாக பொய் வரலாறு புகுத்தப்பட்டு விட்டது..

வரலாற்றிலும் மறைக்கப்பட்ட சென்னை வன்னிய நாயக்கர்கள் - சொந்த மாவட்டத்திலே வெளியில் தெரியாத எத்தனையோ காமெடியனுங்களுக்கு சென்னையில் தெருவுக்கு தெரு சிலை அமைக்க முடிந்த அரசுகள் மண்ணின் மைந்தர்களுக்கு இதுவரை அமைக்க முன் வராமல் ஏமாற்றி கொண்டு இருப்பது தான் சுதந்திரம் பெற்ற பின்னர் நடந்து வருகிறது.
சென்னை என்று அழைத்தாலும் - மதராஸ் என்று அழைத்தாலும் அது என்றுமே வன்னியர் மண் மட்டுமே.
நீ வெளியூரில் இருந்து வந்து இறங்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சர்தார் -ஆதிகேசவ நாயக்கர் சொத்து. நீ சென்னையில் குடிக்கும் குடிநீர் ஆயிரம் காணி ஆளவந்தார் நாயக்கர் இடத்தில் இருந்து எடுக்கப்படும் / சுத்திகரிக்கப்படும் குடிநீர். நீ நடக்கும் இடம் -உட்காரும் இடம் எல்லாமே ஏதோ ஒரு வன்னிய நாயக்கர் தானம் செய்த இடம்.
வன்னிய நாயக்கர்கள் கல்விக்கு செய்த தானத்தில் படித்து பயன்பெற்ற வன்னியரை விட மற்ற சாதியினரே அதிகம் - ஆனாலும் படித்து வெளியேறிய பின்னர் நன்றி உணர்வே இல்லாமல் வன்னியர் மீது வெறுப்பை உமிழும் இந்த நல்லவர்களே அதிகம் பயன் பெற்று உள்ளது தான் விந்தை.
காளஹஸ்தி ஜமீன் வரலாறு :
வன்னியர் வரலாறை எங்கோ இருக்கும் சிறிய ஜமீன் ஆன காளஹஸ்திக்கு தாரைவார்க்கும் வேலைகள் இனி தொடர வாய்ப்பு இல்லை.
அவர்கள் குடும்ப வரலாற்றில் எழுதப்பட்ட தகவல்களே அவர்களுக்கும் தாமல் வன்னிய நாயக்கர்களும் தொடர்பு இல்லை என்று தெளிவாக தெரிவிக்கிறது.
இந்த வரலாற்று புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே அவர்களுக்கும் சென்னைக்கும் தொடர்பு இல்லை என்பதை இனியால கோத்திரம் என்று கூறப்பட்ட தகவல் மூலம் முடிவுக்கு வருகிறது. தாமல் சென்னப்பநாயக்கர் கல்வெட்டுகளில் தார கோத்திரம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ள தகவல் ஒன்றே போதும் இருவருக்கும் உள்ள வேறுபாடு.
இனி மேலாவது சென்னைக்கு நன்றியை செலுத்தும் விதமாக சென்னை என்ற பெயர் வரலாற்றில் நிலைபெற காரணமாக இருந்த சென்னப்ப நாயக்கரின் வாரிசுகளை போற்றி நன்றி கூறுவோம்.