கடற்கரை பட்டினங்களின் வணிக ஆதிக்கம் மற்றும் ஆட்சியின் தொடர்ச்சியாக வந்த வன்னிய பாளையக்காரர்கள் 3 தலைமுறைக்கு மேல் சென்னையின் காவல் அதிகாரியாக தொடர்ந்த வரலாறு:
பிரிட்டிஷ்காரர்கள் எழுதிய குறிப்புகளில் இருந்து:
பெத்த நாயக்கர் : முதல் பாளையக்காரர் பெயர் - அதையே பதவியின் பெயராக மாற்றி பிரிட்டிஷ் குறிப்புகளில் குறிப்பிட்டு உள்ளனர் -
சென்னையின் காவல் பொறுப்பை ஏற்ற கொடுங்கையூர் பெத்த நாயக்கர் குடும்பம் பதவி ஏற்ற 1659 முதல் 1858 வரை தொடர்ந்து 3 தலைமுறையாக பதவி வகித்து உள்ளனர்.
ஆனால் சென்னப்பட்டினம் - மதராசபட்டினம் என்று வரலாறு என்று எழுதிய யார் கண்ணிலும் இந்த குறிப்புகள் தெரியவே இல்லை. தெரியாமல் போக வாய்ப்பு இல்லை - வன்னிய வரலாறை மறைக்க செய்த முயற்சி தான். இப்படி மறைக்கப்பட்ட வரலாறு எல்லாம் தானே வெளியே வரும் காலம் இது.
கொடுங்கையூர் பெத்த நாயக்கர்- இதை கூனி கோரி என்று பின்னாளில் மாற்றம் செய்த ஆய்வாளர்கள்.
ஹிந்து என்பதை - ஜிண்டோ -ஜெண்டு என்று பிரிட்டிஷ்காரர் குறிப்பிட்ட வார்த்தையை தெலுங்கு என்று மொழிமாற்றம் செய்து உள்ளனர் - மூர் - கிருத்துவர்கள் -யூதர் - ஆர்மேனியன் இதை எல்லாம் தெலுங்கு என்று மாற்றாமல் விட்டதே அதிசயம் தான்.
பிரிட்டிஷ் காரர்கள் வணிக மையமாக சென்னப்பட்டினம் செயல்பட ஆரம்பித்த போது அவர்களுடன் இருந்து அவர்கள் அலுவல்களை கவனித்தவர் சேஷாத்ரி நாயக்கர்.
முதல் போலீஸ் - காவல் அதிகாரியாக மெட்ராஸ் பகுதியின் மிக முக்கியமான நபர் பெத்தநாயக்கர். அவரது முக்கியவேலை பியூன் / அவரது காவல் ஆட்களை கொண்டு ப்ளாக் டவுன் மற்றும் பேட்டைகளில் சட்டம் ஒழுங்கை சீர்செய்வது. அவர் குற்றவாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைக்கவும் - திருட்டு நடந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். அவரது பதவி அவர்கள் குடும்பத்திற்கு தொடரும் பதவி. பெத்த நாயக்கர் பற்றிய கம்பனியின் முதல் குறிப்பு 1654 ல் இருந்து உள்ளது.
அந்த குறிப்பில் பெத்த நாயக்கர் வீடு - அந்த கிராமத்தில் உள்ள அவரது வரி நீக்கப்பட்ட நிலம் - மீனவர்களிடம் இருந்து பெறப்படும் வரி பற்றி இருந்தது. அந்த கிராமம் கொசப்பேட்டை என்ற பெயரில் இருந்து பெத்தநாயக்கன் பேட்டை என்று மாற்றம் செய்யப்பட்டு அவரது ஊதியமாக கொடுக்கப்பட்டது. இது தவிர - தானியங்கள் - எரிபொருள் - தெருவோரத்தில் மீன் பிடிப்பதும் -ஆறுகளில் மீன் பிடிப்பதற்கும் வரி வசூல் செய்ய உரிமை உடையவர்.
மூர்த்தி நாயக்கர் மகன் திம்மப்ப நாயக்கர் டவுனில் வீடு கட்டி அங்கு இருந்து டவுன் பாதுகாப்புக்கு 50 பியூன்களை கொண்டு பாதுகாப்பு செய்வார்.
(மூர்த்தி நாயக்கரும் - கொடுங்கையூர் பெத்த நாயக்கர் குடும்பத்தை சேர்ந்தவர் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது)
அதற்க்காக பெத்தநாயக்கருக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள்/ சம்பளம்
18 நெல் வயல் வரி இல்லாமல் கொடுக்கப்படும்
சாகுபடி செய்யப்பட்ட நெல் மூட்டைக்கு ஒரு கொத்து கதிரும் - நெல் ஒரு தாம்பு அளவும் கொடுக்கப்படும். டவுன் எல்லையில் பயிரிடப்படும் தானியங்களில் ஒரு களம் தானியத்துக்கு 6 ல் ஒரு பங்கு கொடுக்கப்படும்.
மீனவர்கள் ஒரு வருடத்துக்கு 225 பணம் செலுத்தப்படவேண்டும். மீன் வியாபரம் செய்பவர்கள் டவுன் பகுதியில் இருந்து வெளியே கொண்டு செல்லும் போது ஒரு பணம் மதிப்பில் நான்கில் ஒரு பங்கு செலுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு பாரம் மீன் குவியலில் 10 மீன் செலுத்தப்பட வேண்டும். ஆற்றில் மீன் பிடிப்பவர்கள் வருடம் 10 பணம் செலுத்தவேண்டும்.
எந்த பொருள் டவுன் உள்ளே கொண்டு வந்தாலும் சுங்கமாக ஒரு பக்கோடா மதிப்புக்கு 1 பணம் 36 காசு கம்பெனிக்கும் - உங்க கணக்கில் பழைய அளவான 12 காசு இப்போது 16 காசு என்று மாற்றம் செய்து வசூல் செய்யலாம்.
மாட்டு வண்டிகளில் கொண்டுவரப்படும் நெல்/அரிசி பெரிய மூட்டை ஒன்றுக்கு 3/4 என்ற அளவும் சிறிய மூட்டைக்கு 1/2 என்ற அளவும் வசூல் செய்யலாம்.
எண்ணெய் எடுப்பவர்கள் செக்கில் தயாரிக்கும் எண்ணெய் அளவுக்கு ஏற்ப 1/2 அளவு எண்ணெய் வசூல் செய்யலாம்.
20,000 பாக்கு அளவில் 30 பாக்கு வரியாக வசூல் செய்யலாம்
கருப்பர் நகரம் - பெத்த நாயக்கன் பேட்டை - பின்னர் பெயர் மாற்றம் ஆன ஜார்ஜ் டவுன் :
பெத்தநாயக்கன் தெரு பின்னர் பாளையக்காராக இருந்து போரில் இறந்த அங்கப்பநாயக்கர் பெயரில் இன்றும் உள்ளது.
1672 ல் லோங்ஹோர்ன் பெத்த நாயக்கருக்கு கொடுத்த சலுகை பற்றிய குறிப்புகள்:
சென்னப்பட்டினம் மார்க்கெட் பகுதிக்கு வரும் நெல் மூட்டை ஒரு ஹிந்து பகோடா மதிப்புக்கு ஒரு கைப்பிடியும் பெரிய மாட்டு வண்டிக்கு 3/4 அளவும் - சிறிய மாட்டு வண்டிக்கு 1/2 அளவும்
கடலில் பிடிக்கப்படும் மீன் ஒரு வலைக்கு கம்பெனிக்கு 5 மீன்களும் பெத்த நாயக்கருக்கு 10 மீன்களும் - தூண்டிலில் பிடிக்கப்படும் மீன்களில் கம்பெனிக்கு 1 மீனும் பெத்த நாயக்கருக்கு 1 மீனும் கொடுக்க வேண்டும் என்ற குறிப்பு
1686 ல் பெத்த நாயக்கருக்கு அதிகம் வருமானம் கிடப்பது பற்றிய விசாரணை:
கிருத்துவர்களுக்கு - உள்ளூர் விவசாயிகளுக்கும் வரி வசூலிக்க வேண்டாம் என்றும் கம்பெனியின் விவசாய நிலங்களுக்கு ஒரு வருடம் வரி விலக்கு கொடுக்கவும் - வருடத்துக்கு ஒரு முறை கம்பனி நிலங்களுக்கு வரி வசூல் டெண்டர் மாதிரியாக சீல் வைத்த கவர் மூலம் வசூலிக்க கூறிய குறிப்பு.
நகரின் தூய்மை பணிகளுக்கு விதிக்கப்பட்ட வரி:
பெரிய வீடுகளுக்கு 9 பணமும் - சிறிய வீடுகளுக்கு 6 பணமும் - குடிசை வீடுகளுக்கு 3 பணமும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி குறைவாக இருப்பதால் அதிகரித்து வீடுகளை 4 பிரிவுகளாக பிரித்து 4,8,12,18 பணம் என்று வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டது.
மாற்றி அமைக்கப்ட்ட வரி வசூல் :
1684 ல் கடல் சுங்கம் - தரைவழி பொருள் சுங்கம் என்று பிரிக்கட்டது. கடல் வழி ஏற்றுமதி - இறக்குமதிக்கு 3% வரி வசூலிக்கப்பட்டது. பெத்த நாயக்கருக்கு தனியாக கொடுக்கப்படும் வரி கிருத்துவர்களுக்கு 3/32 என்றும் ஹிந்து - முஸ்லீம் வணிகர்களிடம் இருந்து 5/32 என்றும் வசூலிக்கப்பட்டது.
தரைவழி சுங்கம் பொருட்கள் உள்ளே வருவது - வெளியே செல்வதற்கு 3% என்றும் பெத்தநாயக்கருக்கு தனியாக ஒரு பகோடா மதிப்பில் கிருத்துவர்கள் 1/2 பணமும் மற்றவர்களிடம் 3/4 பணமும் வசூலிக்கப்பட்டது.
1688 ம் ஆண்டு ஒரே வரி வசூல் முறையாக 5% அனைவரிடமும் வசூலிக்கப்பட்டது.
திம்மப்ப நாயக்கர் - அங்கப்பநாயக்கர் இருவர் பிரச்சனையில் அங்கப்பநாயக்கரிடம் 300 பேரும் -அவரது நண்பர்கள் உதவிக்கு வந்தால் மேலும் 150 பேர் வரை கூடுவார்கள். மேலும் பாளையக்காரர்கள் அவருக்கு உதவியாக இந்த இடத்திற்கு வருவார்கள். இந்த நிலைமையை தவிர்க்க கம்பெனி இருவரையும் சேர்த்து கவனிக்க கூறினார். 1699 ல் அங்கப்பநாயக்கர் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
1727 ல் ஆற்காடு நவாப் வந்த போது வரவேற்க சென்றவர்கள்.
In the last quarter of the eighteenth century there were several complaints of the Poligar's conduct. He was accused of having allowed to escape from his Choultry a notorious robber who had been sentenced by the Court of Quarter Sessions of January, 1795, 'to be publicly whipped three times, and to be kept to hard labor on the roads and public works for the space of two years.'
The Poligar was deprived of his fees at the sea beach by the Board of Revenue.
The Inhabitants of the Black Town, however, petitioned the Government to retain his office in order to watch their houses and goods. The petition read:
பொது மக்கள் மீண்டும் பெத்தநாயக்கர் என்ற பாளையக்காரரை அதே பதவியில் தொடர கம்பெனிக்கு எழுதி விண்ணப்பம்:
பொது மக்களுக்கும் - வியாபாரிகளுக்கு கொடுத்து வந்த பாதுகாப்புக்காகவும் பொதுமக்களின் பொருட்கள் காணாமல் போனால் பொறுப்பு என்ற வகையில் அவருக்கு வரி கொடுத்து வந்தோம். கம்பனியின் நடவடிக்கையால் அவரது பதவி ரத்துசெய்ய பட்டுஉள்ளது.
இதனால் விண்ணப்பதாரர்கள் மிகுந்த பயத்தில் உள்ளோம்- எங்கள் பொருட்கள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க முடியாத பயத்தில் உள்ளோம். அதனால் மீண்டும் பாளையக்காரரை பாதுகாப்பு பணியில் அமர்த்தினால் அதற்கான செலவுகளை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். திருட்டு போகும் பொருள்களுக்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையும் அதற்கு தேவையான ஆட்களை அவர் நியமித்து பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்ட மனு கொடுத்து உள்ளனர்.
இதனால் மீண்டும் பெத்த நாயக்கர் பாளையக்காரர் ஆக புதிய விதிகளை கொண்டு நியமிக்கப்படுகிறார்.
பாளையக்காரர் - கடல் வணிகத்தின் சுங்கம் வசூலில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் கொடுத்த விளக்கம்
The Poligar was deprived of his fees at the sea beach by the Board of Revenue. When he made his 'humble representation' against this action, the Government issued the following order in 1796: 'The Board are aware that the new regulations established for the collection of customs of this Presidency would deprive the Poligar of the fees in question; but neither the utility of his office nor the merit of his conduct entitle him to any exemption from the general rule.' When official protection and patronage were withdrawn, it virtually meant the extinction of the office of Poligar
இதுவரை தொடர்ந்த வழிமுறையை ஜேம்ஸ் கால் என்ற ஆபீசர் கடல் வணிகத்தில் எங்கள் வரியாக கொடுக்கப்பட்ட முறையை நேரடியாக கம்பனிக்கு மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று மாற்றியுள்ளார். இதனால் எங்களுக்கு வரவேண்டிய வரி பாக்கி நிலுவையில் உள்ளது. எங்களது பழைய வரி வசூல் முறையை தொடர நீங்கள் ஜேம்ஸ் கால் க்கு உத்தரவு இடவேண்டும்.
05/01/1798 லார்ட் ஹோபேர்ட் எழுதிய குறிப்பில் பொது மக்களும் - வியாபாரிகளும் பெத்தநாயக்கர் பதவியில் தொடர விரும்புவதாலும் அதற்கான வரி செலுத்த தயாராக உள்ளதாலும் பெத்தநாயக்கர்/ பாளையக்காராக இறந்த கொடுங்கையூர் அங்கப்ப நாயக்கர் மகனை பாளையக்காரக மீண்டும் நியமனம் செய்கிறோம். பாளையக்காரருக்கான வரி வசூல் விகிதம் மட்டும் சலுகைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
1802 முதல் பாளையக்காரர் முறை நீக்கப்பட்டு போலீஸ் முறை உருவாக்கப்பட்டது. ஆனாலும் பழைய பாளையக்காரரை வைத்து அதே முறையில் தொடர்ந்தது. 1858 ல் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது. 1888 ல் இருந்து பெருநகர காவல்துறை என்று மாற்றப்பட்டு தற்போது வரை அதே முறையில் செயல்படுகிறது.
'The office of Pollgar was 'abolished in or about 1802 and a regular police was formed which, however, continued the methods and persons of the old system. In 1858, another effort was made at reform, and the police force was remodelled on the same lines as the provincial constabulary. Then in 1888 the metropolitan Police organization was placed on its present footing'."
1600 களில் ஆரம்பித்த பெத்த நாயக்கர் என்ற வன்னிய பாளையக்காரர் 1802 க்கு பின் போலீஸ் தலைமை பொறுப்பு ஏற்ற வரலாறு.சென்னப்ப நாயக்கர் பட்டினத்தின் காவல் பொறுப்பு சென்னை பிரிட்டிஷ் மாகாண காவல் துறையாக மாற்றப்பட்ட போதும் அதன் முதல் தலைமை பொறுப்பு ஏற்றவரும் வன்னியரே.வன்னியர் வரலாறு வன்மத்துடன் எப்படி திரித்து எழுதினாலும் மாறாது. ஆவணங்கள் ஆதாரங்கள் எல்லாம் தானே வெளியே வரும்.சேஷாத்ரி நாயக்கர், பெத்த நாயக்கர், அங்கப்ப நாயக்கர், மூர்த்தி நாயக்கர் அவர் மகன் திம்மப்ப நாயக்கர், அதற்கு அடுத்து ஒரு பெத்த நாயக்கர் என்று இத்தனை வன்னிய நாயக்கர் கையில் இருந்த சென்னப்ப நாயக்கர் பட்டினம்.


No comments:
Post a Comment